தேங்கி நிற்கும் மழைநீர்; கிராம மக்கள் அவதி

Added : செப் 14, 2020
Share
Advertisement

சேந்தமங்கலம்: சாலையின் நடுவே தேங்கி நிற்கும் மழைநீரால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். ராசிபுரத்தில் இருந்து, சேந்தமங்கலம் வழியாக நாமக்கல் செல்லும் சாலையில், வெட்டுக்காடு கிராமம் உள்ளது. இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பிரதான சாலையில் இருந்து, கிராமத்திற்கு செல்லும் பிரிவு சாலையில், பள்ளமாக இருப்பதால் மழைநீர் தேங்கி நிற்கிறது. சிறிதளவு மழை பெய்தாலும், தண்ணீர் தேங்கி விடுவதால், இவ்வழியாக வாகனத்தில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதேசமயம் கனமழை பெய்தால், சில வாரங்களுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. கொசு உற்பத்தியால், அருகில் இருப்பவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே பிரிவு சாலையில், தண்ணீர் தேங்கி நிற்காதவாறு ஏற்பாடு செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X