பொது செய்தி

தமிழ்நாடு

மகிளிப்பட்டி கிராமத்தில் கதண்டு அழிப்பு பணி தீவிரம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

கிருஷ்ணராயபுரம்: மகிளிப்பட்டி சாலையோரம் இருந்த புளியமரத்தில், கூடு கட்டியிருந்த விஷ கதண்டுகள் அகற்றப்பட்டன. கிருஷ்ணராயபுரம் அடுத்த, மகிளிப்பட்டி சாலையோரம் புளியமரம் ஒன்று இருந்தது. இந்த மரத்தில் விஷ கதண்டுகள் அதிகமாக கூடு கட்டியிருந்தன. நேற்று முன்தினம் மாலை, கூலி தொழிலாளர்கள் ஜெயா, 38, வெற்றிவேல், 50, பழனியப்பன், 60, பாப்பாத்தி, 55, ஆகியோர் நடந்து செல்லும் போது கதண்டுகள் கடித்துள்ளன. இதில் அனைவரும் காயமடைந்து குளித்தலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிந்தலவாடி பஞ்சாயத்து வி.ஏ.ஓ., பிரபு, முசிறி தீயணைப்பு நிலையத்தில் மனு அளித்தார். அதன்படி, தீயணைப்பு நிலைய அலுவலர் முனியாண்டி தலைமையில் இரவு, 10:30 மணிக்கு மரத்தில் இருந்த கதண்டுகளை, மருந்து அடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதன் மூலம் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X