பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் மாவட்டத்தில் 'நீட்' தேர்வு: தேர்வெழுதிய 1,764 மாணவ, மாணவியர்

Added : செப் 14, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் மாவட்டத்தில், நீட் தேர்வில், 1,764 மாணவ, மாணவியர் நீட் தேர்வு எழுதினர். பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, மே, 3ல் நடப்பதாக இருந்தது. ஆனால், கொரோனா தொற்று பிரச்னை காரணமாக, தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று நீட் தேர்வு நடந்தது. கரூர் மாவட்டத்தில், மூன்று தேர்வு மையங்களில் மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இதன்படி, வெண்ணைமலை கொங்கு கலை, அறிவியல் கல்லூரி, கரூர் காருடையாம்பாளையம் வி.எஸ்.பி., பொறியியல் கல்லூரி, கரூர் காக்காவாடி வேலம்மாள் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி என, மூன்று தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். மொத்தம், 2,103 மாணவ, மாணவியர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், 1,764 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இதில், 339 மாணவ, மாணவியர் தேர்வு எழுதவில்லை. உடல் வெப்ப நிலை சோதிக்கப்பட்ட பின், மாணவ, மாணவியர் அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியை பின்பற்றி, மாணவ, மாணவியர் நின்றிருந்தனர். ஹால் டிக்கெட் உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்து, தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் கிருமி நாசினியை பயன்படுத்தி, கைகளை சுத்தம் செய்த பிறகே, தேர்வு மையத்துக்குள் சென்றனர். தேர்வெழுதிய மையங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X