முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு சிலை அமைக்க கோரி தீர்மானம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு சிலை அமைக்க கோரி தீர்மானம்

Added : செப் 14, 2020
Share

கரூர்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு, கரூரில் சிலை அமைக்க வேண்டும் என, பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கரூர் மாவட்ட, பா.ஜ., செயற்குழு கூட்டம், தலைவர் சிவசாமி தலைமையில், தான்தோன்றிமலையில் நடந்தது. அதில், பிரதமரின் வேளாண் உதவி திட்டம், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றில், தமிழகத்தில் ஊழல் செய்த அரசு அதிகாரிகளை கைது செய்ய வேண்டும். கரூரில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு சிலை வைக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் நவோதயா பள்ளி அல்லது கேந்திரிய வித்யாலயா பள்ளி துவக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியாற்றில் வரும் உபரி நீரை, வறண்ட ஏரி, குளங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். தோகமலையை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும், கரூர்-கோவை ஆறு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பா.ஜ., செயலாளர் வரதராஜன், மகளிர் அணி துணைத்தலைவர் மீனா, மாவட்ட பொதுச் செயலாளர்கள் நகுலன், மோகன், செந்தில்குமார், பொருளாளர் குணசேகரன் உள்பட பலர் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X