பொது செய்தி

தமிழ்நாடு

ஒத்தமாந்துறை வழியாக தென்னிலைக்கு டவுன் பஸ் இயக்க கோரிக்கை

Added : செப் 14, 2020
Share
Advertisement

கரூர்: ஒத்தமாந்துரை வழியாக, தென்னிலைக்கு பஸ்களை இயக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


அரவக்குறிச்சி, பள்ளபட்டிக்கு மறு வழித்தடமான ஒத்தமாந்துரை வழியாக, எவ்வித டவுன் பஸ்சும் இயக்கப்படுவதில்லை. இந்த மாற்று வழிதடத்தில், பெயின்டர்கள், கூலி வேலை பார்ப்பவர்கள், மாணவ, மாணவியர், அரசு பணியாளர்கள் டவுன் பஸ் வசதி இல்லாததால் பெரும் பாதிப்பில் உள்ளனர். தென்னிலை, சின்ன தாராபுரம் சுற்றுவட்டார மக்கள் பல்வேறு சான்றிதழ் பெற, அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் வரும்போது சிரமப்படுகின்றனர். இதே போல தாராபுரம், பொள்ளாச்சி உள்ளிட்ட மேற்கு மாவட்ட ஊர்களிலிருந்து, அரவக்குறிச்சி, பள்ளபட்டி உள்ளிட்ட இந்த வழித்தடத்திலுள்ள ஊர்களுக்கு வருபவர்கள், சின்னதாராபுரம் சென்று ராஜபுரம் வழியாக, 15 கி.மீ., சுற்றிக் கொண்டு வரவேண்டியுள்ளது. இந்த வழித்தடத்தில் டவுன் பஸ் இயக்கினால், பள்ளபட்டி பிரிவிலிருந்து அரவக்குறிச்சிக்கு நேர்வழியாக வந்து விட முடியும். எனவே அரவக்குறிச்சி, ஊத்தூர், மாலமேடு, தண்ணீர்பந்தல், அரிக்காரன்வலசு, கள்ளமடைப்புதூர், பள்ளபட்டி பிரிவு, ஒத்தமாந்துறை வழியாக இரு மார்க்கத்திலும் டவுன் பஸ் வசதி செய்வதன் மூலம், இப்பகுதியிலுள்ள ஏராளமானோர் பயனடைய முடியும். தாலுகா தலைமையிடமான அரவக்குறிச்சியிலிருந்து, பள்ளபட்டி பிரிவு ஒத்தமாந்துறை வழியாக, தென்னிலை வரை டவுன் பஸ் இயக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X