பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.1.49 கோடி மதிப்பில் வாய்க்கால் சீரமைப்பு பணி

Added : செப் 14, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் ஊராட்சி ஒன்றியம், ஆத்தூர் பூலாம்பாளையம் பஞ்சாயத்துக்குப்பட்ட, கள்ளிப்பாளையத்தில், புதிய நாடக மேடை திறப்பு விழா நடந்தது. போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்து பேசியதாவது: இந்த ஆட்சி காலத்தில், 12 கோடி ரூபாய் மதிப்பில் அமராவதி ஆற்றின் குறுக்கே, உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. கரூர் நகரப்பகுதிகளுக்குட்பட்ட, 20 சாலைகளை இணைத்து, கரூர் ரயில்வே சந்திப்பு முதல், தேசிய நெடுஞ்சாலை வரை அம்மா சாலை பணி, 21.12 கோடி ரூபாய் மதிப்பில் நடக்கிறது. ஆத்துப்பாளையம் பிரதான வாய்க்காலை புனரமைக்க, 1.49 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார். நிகழ்ச்சியில், கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிகா, கூட்டுறவு சங்க பிரதிநிதி கமலக்கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X