பொது செய்தி

தமிழ்நாடு

தடை செய்யப்பட்ட லாட்டரி பள்ளபட்டியில் விற்பனை

Added : செப் 14, 2020
Share
Advertisement

அரவக்குறிச்சி: தமிழகத்தில், லாட்டரி விற்பனைக்கு தடை விதித்துள்ள நிலையில், அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில், மறைமுகமாக விற்பனை நடந்து வருகிறது. பள்ளபட்டியை மையமாக கொண்டு, லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடக்கிறது. வாடிக்கையாளர்களுக்காக, குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்லும் வியாபாரிகள், மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு விற்பனை செய்கின்றனர். தங்கம், நல்லநேரம், குயில், ரோஜா, விஷ்ணு இன்னும் பல பெயர்களில், லாட்டரி சீட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தினமும் மாலை, 4:00 மணிக்கு ரிசல்ட் வந்தவுடன், ஏஜன்டுகள் வாடிக்கையாளர்களை தொடர்புகொண்டு முடிவுகளை தெரிவிக்கின்றனர். பள்ளபட்டியில் மட்டும் நடந்து வந்த லாட்டரி விற்பனை, தற்போது வியாபாரத்தை விரிவுபடுத்தும் நோக்கில், கிராமப்புறங்களுக்கும் சென்று விற்பனை செய்கின்றனர். இதை கட்டுப்படுத்த போலீஸ் நடவடிக்கை தேவை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X