சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சர்க்கரை ஆலையில் மின்சாரம் தாக்கி இருவர் படுகாயம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

கரூர்: டி.என்.பி.எல்., சர்க்கரை ஆலையில், மின்சாரம் தாக்கி, இரு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். கரூர் மாவட்டம், புலியூர் சின்னமநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ், 39; கரூர் அருகே புதூர் நான்கு சாலை, பூங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன், 37; இருவரும், கரூர் அருகே புகளூர் டி.என்.பி.எல்., சர்க்கரை ஆலையில் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு சர்க்கரை ஆலையில் உள்ள மின் மோட்டார் பழுதானது. அதை, பிரகாஷ், சரவணன் சரி செய்துள்ளனர். பிறகு, மின் இணைப்பு கொடுத்த போது, மின் மோட்டாரில் இருந்து, எதிர்பாராத விதமாக பிரகாஷ், சரவணன் மீது மின்சாரம் பாய்ந்தது. அதில், படுகாயமடைந்த பிரகாஷ், கரூர் தனியார் மருத்துவமனையிலும், சரவணன் கோவை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X