சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சரக்கு வாகனம்-கார் மோதல்: ஒருவர் பலி; மூவர் படுகாயம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

கிருஷ்ணராயபுரம்: மகாதானபுரத்தில், கார் மீது சரக்கு வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மூவர் படுகாயம் அடைந்தனர். கரூர்-திருச்சி நெடுஞ்சாலை மகாதானபுரம் பஸ் ஸ்டாப் அருகில், நேற்று மாலை, திருச்சியில் இருந்து கரூர் நோக்கி மாருதி சுசிகி காரில் மோசாஸ் அமல்ராஜ், 41, இவருடன் மூன்று பேர் காரில் சென்றனர். அப்போது, பெங்களூருவில் இருந்து திருச்சி நோக்கி சென்ற சரக்கு வாகனம், கார் மீது மோதியது. இதில், கார் ஓட்டி வந்த மோசாஸ் அமல்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் வந்த உறவினர்கள் ஜெர்சியா, 35, இவர் மகள்கள் கிருஷ்டினா ஜெனிபர், 22, ஜெயஸ்ரீ, 16, ஆகிய மூவரும் காயமடைந்து, கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். லாலாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X