சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம் பெண் மாயம்: போலீசில் புகார்

Added : செப் 14, 2020
Share
Advertisement

குளித்தலை: வை.புதூரில், தனியார் டெக்ஸ் கம்பெனிக்கு வேலைக்கு சென்ற மகளை காணவில்லை என, போலீசில் தாய் புகார் கொடுத்துள்ளார். குளித்தலை அடுத்த, வைகைநல்லூர் பஞ்., வை.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வைரம்மாள், 47, இவர் மகள் மகாலட்சுமி, 20, பிளஸ் 2 வரை படித்துள்ளார். இவர் வை.புதூர் பகுதியிலுள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறி, வீட்டை விட்டு சென்றவர், வெகுநேரமாகியும் திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மகள் காணவில்லையென தாய் வைரம்மாள் கொடுத்த புகார்படி குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X