சம்பவம் செய்தி

தமிழ்நாடு

களிமண் கடத்திய டிராக்டர் பறிமுதல்; 2 பேர் மீது வழக்கு

Added : செப் 14, 2020
Share
Advertisement

குளித்தலை: மாயனூரில், சட்டவிரோதமாக களிமண் கடத்திய, டிப்பர் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. குளித்தலை அடுத்த, மாயனூர் பஞ்சாயத்து, ரங்கநாதபுரம் வி.ஏ.ஓ., நல்லுசாமி தலைமையில், நத்தமேடு கட்டளை சாலையில், இலுப்புதோப்பு என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த டிராக்டரை நிறுத்தியுள்ளனர். வி.ஏ.ஓ.,வை கண்டதும் டிராக்டர் உரிமையாளர் தப்பிவிட்டார். டிராக்டரை சோதனை செய்ததில், உரிய ஆவணங்கள் இல்லாமல், அரசு அனுமதியின்றி களிமண் எடுத்து வந்தது தெரியவந்தது. விசாரணையில், நத்தமேடு குடிதெரு பகுதியை சேர்ந்தவர் டிரைவர் பாலசுப்ரமணி, 48, அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி, 37, என்பவருக்கு சொந்தமான டிராக்டர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வி.ஏ.ஓ.,நல்லுசாமி அளித்த புகார்படி, சட்டவிரோதமாக மணல் அள்ளிய டிப்பர் டிராக்டர் வாகனத்தை பறிமுதல் செய்தும், இருவர் மீது வழக்குப்பதிவு செய்தும் மாயனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X