பொது செய்தி

தமிழ்நாடு

வேளாங்கண்ணியில் குவிந்த பக்தர்கள்: கொரோனா தொற்று பரவும் அபாயம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

நாகப்பட்டினம்: ஊரடங்கு தளர்வு காரணமாக, நேற்று விடுமுறை தினத்தில், வேளாங்கண்ணியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலய ஆண்டுத் திருவிழா, கடந்த, 8ம் தேதி வரை நடந்தது. அப்போது, வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் வருகைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. அந்த தடை, 9ம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமையான நேற்று விடுமுறை தினம் என்பதால், வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் காலை முதல், அதிகளவில் குவிந்தனர். தேவாலயத்திற்குள் வரும் பக்தர்கள், கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்து, உடல் வெப்ப பரிசோதனை, முக கவசம் அணிந்தவர்கள் மட்டும் அணுமதிக்கப்பட்டனர். தேவாலய வெளி பகுதியில், பெரும்பாலான பக்தர்கள் முக கவசம், சமூக இடைவெளியை மறந்து, கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிந்தனர். கடற்கரை பகுதியில் போலீசாரின் எச்சரிக்கையை மீறி, ஏராளமானோர் ஆபத்தை உணராமல் கடலில் குளித்தனர். நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று, 4,000த்தை கடந்து, உச்சத்தில் உள்ளது. இந்நேரத்தில் வெளி மாநில, மாவட்ட பக்தர்கள் வருகையால், கொரோனா தொற்று பாதிப்பு மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X