பொது செய்தி

தமிழ்நாடு

'மண்டபம், உணவகங்கள் விதிகளை கடைப்பிடிக்கணும்'

Added : செப் 14, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: தேசிய பசுமை தீர்ப்பாயம், கடந்த ஜூலை, 23ல் பல்வேறு விதிமுறைகளை கடைப்பிடிக்க உத்தரவிட்டது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, அனைத்து திருமண மண்டபங்கள், உணவகங்கள், நெடுஞ்சாலை உணவகங்கள், விருந்து அரங்கங்கள் ஆகியவை, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வகுத்துள்ள வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் நிறுவுவதற்கான இசைவாணை, இயக்குவதற்கான இசைவாணையை பெற வேண்டும். தவறும் பட்சத்தில், அந்நிறுவனங்களின் இயக்கத்தை நிறுத்தி வைக்கவும், வழக்கு தொடரவும், சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகையை வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். விபரங்களுக்கு, மாசு கட்டுப்பாடு வாரிய தர்மபுரி அலுவலகத்தை, 04342 27005 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X