சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவரின் உடலை வாங்க மறுத்து மறியல்

Added : செப் 14, 2020
Share
Advertisement

தர்மபுரி: 'நீட்' தேர்வு எழுதவிருந்த மாணவர், தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், உடலை வாங்க மறுத்து மறியலில் ஈடுபட்டனர்.
தர்மபுரி, இலக்கியம்பட்டி செவத்தான் கவுண்டர் தெருவை சேர்ந்த மணிவண்ணன் மகன் ஆதித்யா, 20; மூன்றாவது முறையாக, 'நீட்' தேர்வு எழுத இருந்தார். நேற்று முன்தினம் மாலை, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தர்மபுரி டவுன் போலீசார், உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மாணவர் ஆதித்யா உடற்கூறு பரிசோதனை, நேற்று காலை நடந்தது. தங்கள் அனுமதியின்றி, பரிசோதனை செய்ததாக புகார் கூறிய, பெற்றோர் மற்றும் உறவினர்கள், பிரேத பரிசோதனை கூடம் முன், மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானத்தால், மதியம், 3:40 மணிக்கு உடன்பாடு ஏற்பட்டது. ஆதித்யாவின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை, உரிய நிவாரணம் பெற்று தரப்படும் என, உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆதித்யாவின் உடல், அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம், பூசாரிப்பட்டிக்கு எடுத்து செல்லப்பட்டது. முன்னதாக அமைச்சர் அன்பழகன், கலெக்டர் மலர்விழி, தி.மு.க., முன்னாள் எம்.பி., தாமரைச்செல்வன், பா.ம.க., மாநில நிர்வாகி வெங்கடேஷ்வரன், அ.ம.மு.க., மாநில நிர்வாகி முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உட்பட, பல்வேறு அரசியல் கட்சியினர், ஆதித்யாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X