பொது செய்தி

தமிழ்நாடு

பவானிசாகர் நீர்மட்டம் 2வது முறையாக 'சதம்'

Added : செப் 14, 2020
Share
Advertisement

பவானிசாகர்: பவானிசாகர் அணை நீர்மட்டம், நடப்பாண்டில் இரண்டாவது முறையாக, 100 அடியை எட்டியுள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை, 105 அடி உயரம்; 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதிகளில், பருவமழை கொட்டியதால், கடந்த ஆக., மாதம், 102 அடியை எட்டியது. அதன்பின் போதிய மழை இல்லாததால், நீர்வரத்து சரிந்தது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீலகிரி மாவட்ட பகுதிகளில், தற்போது பரவலாக மழை பெய்கிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை, 4,975 கன அடியாக இருந்த நீர்வரத்து, 7,016 கனஅடியாக மாலையில் உயர்ந்தது. அதேசமயம் நேற்று முன்தினம், 99.49 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்றிரவு, 100 அடியை எட்டியது. நடப்பாண்டில், இரண்டாவது முறையாக நீர்மட்டம், 100 அடியை தொட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X