பொது செய்தி

தமிழ்நாடு

தொற்றுடன் 'நீட்' தேர்வு எழுத வந்த மாணவன்; கரூரில் பரபரப்பு

Added : செப் 14, 2020
Share
Advertisement

கரூர்: கொரோனா தொற்றுடன், 'நீட்' தேர்வு எழுத வந்த மாணவரை, ஆறுதல் கூறி அலுவலர்கள் அனுப்பி வைத்தனர். கரூர், காருடையாம்பாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில், 'நீட்' தேர்வு நேற்று நடந்தது. தெர்மல் பரிசோதனை செய்த பிறகே, மாணவ, மாணவியர் அனுமதிக்கப்பட்டனர். திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலை சேர்ந்த ஒரு மாணவன் வந்தார். சில நாட்களுக்கு முன், அவரது தந்தை கொரோனா தொற்றால் இறந்துள்ளார். அவருக்கும் இரண்டு நாட்களுக்கு முன், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், தேர்வுக்கு வந்தார். மாணவரின் மருத்துவ சான்றிதழ் உட்பட ஆவணங்களை, தேர்வு அலுவலர்களிடம் உறவினர்கள் காண்பித்தனர். 'மாணவரை தொற்று பாதிப்புடன், தேர்வெழுத அனுமதிக்க முடியாது. அதேசமயம், தேர்வு எழுத முடியாத காரணத்தை பதிவு செய்து கொள்கிறோம்' என்று, தேர்வு அலுவலர்கள் கூறினர். இதுபோன்றவர்களுக்கு, வேறு நாளில் தேர்வு எழுத வாய்ப்பு இருப்பதாகவும், தேர்வு அலுவலர்கள் ஆறுதல் கூறி, மாணவரை அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X