பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய்த்துறை அலட்சியம்; சான்றிதழ் பெறுவதில் சிக்கல்

Added : செப் 14, 2020
Share
Advertisement

வீரபாண்டி: பள்ளி, கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடப்பதால், இருப்பிடம், வருமானம், முதல் பட்டதாரி உள்பட வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றுகளுக்கு, தினமும் பலர் விண்ணப்பிக்கின்றனர். குறிப்பாக, சேலம் மாவட்டம், வீரபாண்டி வட்டாரத்தில், விண்ணப்பிக்கும் மனுக்களை, உடனுக்குடன் ஆய்வு செய்யாமல், 20 நாளுக்கு மேலாக, அப்படியே வைத்துள்ளனர். அதேநேரம், வி.ஏ.ஓ.,க்கள், வருவாய் ஆய்வாளரை தனியாக சந்தித்து அழுத்தம் கொடுப்பவர்களின் விண்ணப்பங்கள் மட்டும், தாசில்தாருக்கு அனுப்புவதாக புகார் எழுந்தது. மற்றவர்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதை தவிர்க்க, உடனுக்குடன் வருவாய்த்துறையினர் விண்ணப்பங்களை ஆய்வு செய்து அனுப்பி, சான்றிதழ் வழங்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X