தமிழ்நாடு

பிரதமர் திட்டத்தில் மோசடி: தகுதியற்ற பயனாளிகள் பணத்தை உடனடியாக செலுத்த வலியுறுத்தல்

Added : செப் 14, 2020
Share
Advertisement

சேலம்: பிரதமரின் கிசான் திட்டத்தில், மோசடி செய்த தகுதியற்ற பயனாளிகள், பணத்தை உடனடியாக திரும்ப செலுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில், பிரதமரின் கிசான் திட்டத்தில், ஆறு கோடி ரூபாய், மோசடி நடந்துள்ளது. இதை மீட்க, 175 பேர் அடங்கிய, 10 குழு களமிறக்கப்பட்டுள்ளது. கடந்த, 11ம் தேதிவரை, 1.86 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. மீதி பணத்தை திரும்ப பெறும் நடவடிக்கையாக, தகுதியற்ற பயனாளிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தாமாக முன்வந்து பணத்தை செலுத்த ஏதுவாக, 'தண்டோரா'வும் போடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில், மொத்த பயனாளிகள், 18 ஆயிரத்து, 269 பேர். இதில், 20 வட்டத்தில், 10 ஆயிரத்து, 610 பேர், நிதியுதவிக்கு தகுதியற்றவராக கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சம் மகுடஞ்சாவடி வட்டாரத்தில், 1,412 பேர், இடைப்பாடி, 1,230, நங்க வள்ளி, 1,040, சங்ககிரி, 754, மேச்சேரி, 729, ஆத்தூர், 610, பெத்தநாயக்கன் பாளையம், 600, தாரமங்கலம், 565, கொங்கணாபுரம், 455, பனமரத்துப்பட்டி, 454, தலைவாசல், 427, வாழப்பாடி, 383, காடையாம்பட்டி, 378, அயோத்தியாப்பட்டணம், 377, வீரபாண்டி, 307, ஓமலூர், 258, கொளத்தூர், 214, கெங்கவல்லி, 177, சேலம், 150, ஏற்காடு வட்டாரத்தில், 33 பேர், கண்டுபிடிக்க இயலாதவை, 57 ஆகும். இவர்கள் உடனடியாக பணத்தை திரும்ப செலுத்த, அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

'ரேஷன் பொருட்கள் வாங்க தடையில்லை': சேலம் கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமரின் கிசான் நிதி திட்டத்தில், நிதியுதவி பெற்ற தகுதி யற்ற பயனாளிகள் பெயர் பட்டியல், அந்தந்த வி.ஏ.ஓ., ஊராட்சி உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளன. மீட்பு குழுக்கள், தகுதியற்ற பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று, பணத்தை வங்கி கணக்கில் திருப்பி செலுத்த அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், நிதியுதவி பெற்ற தகுதி யற்ற பயனாளிக்கு, ரேஷன் பொருட்கள் நிறுத்தப்பட மாட்டாது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X