சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சேலத்தில் நகைக்காக பெண் கொடூர கொலை: 'கவரிங்' பறித்து தப்பிய கொலையாளி கைது

Added : செப் 14, 2020
Share
Advertisement

சேலம்: தங்க நகை என நினைத்து, சேலத்தில் பெண்ணை கொன்று, 'கவரிங்' நகை பறித்துச் சென்ற, படுபாதக வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூரை சேர்ந்தவர் மலர்செல்வி, 49; சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, சொர்ணாம்பிகை தெருவில், மகன் வெங்கடேசன், 21, உடன் வசித்தார். நான்கு ஆண்டுக்கு முன், கணவர் இறந்து விட்டார். சூரமங்கலத்தில் தனியார் நிறுவனத்தில், மகன் பணிபுரிகிறார். மலர்செல்வி வீடுதோறும் சென்று, சோப்பு, மளிகை பொருட்களை விற்று வந்தார். கணவருக்கு திதி கொடுக்க, திருவாக்கவுண்டனூரை சேர்ந்த கானிபித்தன் என்பவரிடம், 50, ஆயிரம் ரூபாய் கடன் கேட்டார். தன் மகன் மனோகரன், 21, என்பவரிடம் பணம் தந்து அனுப்புவதாக அவர் கூறினார். இதன்படி நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு மலர்செல்வி வீட்டுக்கு மனோகரன் வந்தார். அவருக்கு டீ போட, சமையலறைக்கு மலர்செல்வி சென்றார். அப்போது மலர்செல்வியின் தலையில் கட்டையால் தாக்கிய மனோகரன், அவர் மயங்கி விழுந்ததும், சேலையால் கழுத்தை நெரித்து கொன்றார். அவர் அணிந்திருந்த, 'கவரிங்' நகைகளை, தங்க நகை என நினைத்து திருடிச் சென்றார். இரவு, 11:00 மணிக்கு, வீடு திரும்பிய மகன், தாய் சடலத்தை பார்த்து அதிர்ந்து, டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அங்கு சென்ற போலீசார், மலர்செல்வி மொபைல்போனை ஆய்வு செய்ததில், கொலை செய்தது, மனோகரன் என்பதை உறுதிப்படுத்தினர். அவரை நேற்று கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கந்து வட்டிக்கு பணம் கொடுத்த நிலையில், பலர் திருப்பி தராமல் ஏமாற்றி உள்ளனர். இதனால் தொழில் விருத்திக்கு, கொல்லிமலையில் மனோகரன் ஜோசியம் கேட்டுள்ளார். ஜோசியர் ஆலோசனைப்படி, இரண்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கி பூஜை செய்துள்ளார். அதை திருப்பி செலுத்த முடியாத நிலையில், மலர்செல்வி அணிந்திருந்த நகையை, தங்கம் என கருதி, அவரை கொலை செய்து, பறித்து சென்றுள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X