சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வு எழுத அச்சம்; மாணவி 'திடுக்' முயற்சி

Added : செப் 14, 2020
Share
Advertisement

ராணிப்பேட்டை: 'நீட்' தேர்வு எழுத பயந்து, அளவுக்கதிகமாக மாத்திரை சாப்பிட்டு, மாணவி தற்கொலைக்கு முயன்றது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர், பாரதிநகரை சேர்ந்தவர் ரவிசேகர், 65; ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர். இவரின் மகள் சவுமியா, 19; சென்னையில் தனியார் பள்ளியில் படித்த அவர், 2018ல் பிளஸ் 2வில், 400 மதிப்பெண் பெற்றார். இந்தாண்டு, 'நீட்' தேர்வு எழுத பயிற்சி பெற்று வந்தார். வேலூர் மாவட்டம், காட்பாடியில், தனியார் பல்கலைக்கழகத்தில், நேற்று தேர்வு எழுத இருந்தார். கடைசி நேரத்தில் பயந்த மாணவி, காலை, தற்கொலை செய்து கொள்ள, அளவுக்கு அதிகமாக பாராசிட்டமல் மாத்திரையை குடித்து விட்டார். இதனால் மயங்கி விழுந்த அவரை, மேல்விஷாரத்திலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவி நலமுடன் இருப்பதாக, டாக்டர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X