ஊரடங்கால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு, மரணம் குறைவு: ஹர்ஷ்வர்தன்

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Lockdown, deaths, HarshVardhan, LokSabha, ஊரடங்கு, மரணம், கொரோனா,

புதுடில்லி: இந்தியாவில் நான்கு மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக, 14-19 லட்சம் கொரோனா தொற்று குறைக்கப்பட்டுள்ளதாகவும், 37- 78 ஆயிரம் மரணங்களை தடுத்துள்ளதாகவும் லோக்சபாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

பார்லிமென்டின் முதல்நாளான இன்று லோக்சபாவில் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அளித்த பதில்: ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட இந்த நான்கு மாதத்தில் சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்கவும், போதிய நபர்களை தேர்வு செய்யவும், பிபிஇ, என்-95 மாஸ்க்குகள், வென்டிலேட்டர்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க பயனுள்ளதாக இருந்தது. அப்போது இருந்ததை விட, தற்போது 36.3 மடங்கு தனிமைபடுத்தப்பட்ட படுக்கைகள், 24.6 மடங்கு ஐசியு படுக்கைகள் அதிகரித்துள்ளன. அப்போது, இந்தியாவில் தரமான பிபிஇ சாதனங்கள் இல்லை. ஆனால், தற்போது தேவையான அளவு உள்ளதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்.


latest tamil news



ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கொரோனா தொற்றும் குறைவாக உள்ளது. 10 லட்சம் பேருக்கு 3,328 ஆக உள்ளது. உயிரிழப்பும், 10 லட்சம் பேருக்கு 55 ஆக உள்ளது. 14-19 லட்சம் கொரோனா தொற்று குறைக்கப்பட்டுள்ளது. 37 ஆயிரம் முதல் 78 ஆயிரம் மரணங்கள் தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
14-செப்-202020:12:07 IST Report Abuse
Visu Iyer 7+3=11
Rate this:
Cancel
14-செப்-202017:15:58 IST Report Abuse
ஆப்பு அரைச்ச மாவையே அரைக்குறாங்க. இந்தியா தவிர பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற ஏராளமான ஆசியநாடுகளில் மக்கள் அதிக அள்வில் மீண்டிருக்கிறார்கள். இதுக்கு காரணம் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X