பொது செய்தி

இந்தியா

கொரோனாவிலிருந்து மீண்டவர் எண்ணிக்கையில் பிரேசிலை முந்தியது இந்தியா

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020
Share
Advertisement
corona, coronavirus, india, brazil,  revovery, healthministry, கொரோனா, கொரோனாவைரஸ், குணமடைந்தவர்கள், ஜான்ஹாேப்கின்ஸ், பல்கலை,

புதுடில்லி: கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில், பிரேசில் நாட்டை இந்தியா முந்திவிட்டதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜான்ஹாப்கின்ஸ் பல்கலையானது, உலகளவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இறந்தவர்களின் எண்ணிக்கையை தொகுத்து வெளியிட்டு வருகிறது. இப்பல்கலைகளின் தரவுகளின்படி, உலகளவில் 29,006.003 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19,625,959 பேர் குணமடைந்துள்ளனர். 9,24,105 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து பிரேசிலில் 37,23,206 பேர் மீண்டனர். இந்தியாவில் 37,80, 107 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் பிரேசிலை இந்தியா முந்தியுள்ளது.


latest tamil news



மத்திய சுகாதார அமைச்சகளின் புள்ளிவிவரத்தின்படி குணமடைந்தவர்களின் விகிதம் 78 சதவீதமாக உள்ளது. சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 77, 512 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 37, 80,107 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் உள்ளவர்களின் இடைவெளி தொடர்ந்து அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, அந்த இடைவெளி 27,93,509 ஆக உள்ளது. இந்தியாவில் தற்போது 9,86,598 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பு 48, 46,427 ஆக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X