உமர் காலித்திற்கு 10 நாள் காவல்: போலீசார் கோரிக்கை

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
உமர்காலித், போலீசார், கைது, டில்லிகலவரம், குடியுரிமைசட்டம்,

புதுடில்லி: டில்லியில் நடந்த கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலை முன்னாள் மாணவர் உமர் காலித்தை 10 நாள் காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும் என போலீசார், டில்லி கோர்ட்டில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டில்லியில் போராட்டம் நடந்தது. அப்போது, கடந்த பிப்., 24 முதல் 26 வரை டில்லியின் வடகிழக்கு பகுதிகளான ஜாப்ராபாத், சீலம்பூர், சிவ் விஹார் உள்ளிட்ட பகுதிகளில் கலவரம் ஏற்பட்டது. இதில் 53 பேர் உயிரிழந்தனர். 581 பேர் காயமடைந்தனர்.


latest tamil news


இந்த சம்பவம் தொடர்பாக, ஜேஎன்யு பல்கலை முன்னாள் மாணவர் உமர்காலித்திடம் டில்லி போலீசார் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, யுஏபிஏ( Anti-terror las unlawful activities prevention act) கீழ் உமர்காலித்தை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவரை கர்கர்டூமா மாவட்ட நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத், முன்னிலையில் வீடியோ கான்பரன்ஸ் முறையில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, உமர்காலித்தை 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். உமர்காலித்திடம், ஆதாரங்களை வைத்து விசாரணை நடத்த வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
15-செப்-202016:52:42 IST Report Abuse
Rafi இந்திய தேசத்திற்கு ஆதரவாக அவர் பேசியதே அவரை இந்த பொய் குற்றச்சாட்டிலிருந்து வெளிக்கொண்டு வரும். கலவரத்திற்கு ஆதரவானவனுக்கு அரசின் சிலவில் பாதுகாப்பு கொடுப்பதையும் மக்கள் கேள்வியெழுப்பி கொண்டிருப்பதையும் வலை தளத்தில் காணமுடிகின்றது. ஏற்கனவே UP இல் மக்கள் சேவை செய்து வந்த ஒரு டாக்டரின் மீது கொடுத்த பொய் குற்றசாட்டுகளை நீதிமன்றம் புறந்தள்ளியதும் நினைவில் கொள்ளவேண்டும்.
Rate this:
Cancel
K.Muthuraj - Sivakasi,இந்தியா
14-செப்-202020:58:15 IST Report Abuse
K.Muthuraj மக்களின் மனதினை மொழியால் மதத்தால் சாதியால் கலாச்சாரம் என்று கூறி பிரிவினை எண்ணங்களுடன் வைத்திருப்பது தான் இன்றைய தேதியில் ஒரு நாட்டை முன்னேற விடாமல் செய்யும் வழி. அதனால் சீனா இந்த மாதிரி ஆட்களை இரக்கமின்றி ஒடுக்கி விடுகின்றது.
Rate this:
Cancel
14-செப்-202019:31:14 IST Report Abuse
chandran, pudhucherry காலி பண்ணுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X