பொது செய்தி

தமிழ்நாடு

பேனர் கட்டும் ரசிகர் இறந்தால் சினிமாவை தடை செய்யலாமா? - சூர்யாவுக்கு காயத்ரி கேள்வி

Updated : செப் 15, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (224)
Share
Advertisement
சென்னை : நீட் தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவருக்கு நடிகையும், பா.ஜ.வை சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் எழுப்பி கேள்வி வைரலாகி உள்ளது.பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று(செப்., 13) நாடு முழுவதும் நடந்து முடிந்தது. இந்த தேர்வுக்கு பயந்து தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து
Suriya, Gayathiriraguram,

சென்னை : நீட் தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவருக்கு நடிகையும், பா.ஜ.வை சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் எழுப்பி கேள்வி வைரலாகி உள்ளது.

பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று(செப்., 13) நாடு முழுவதும் நடந்து முடிந்தது. இந்த தேர்வுக்கு பயந்து தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதை சுட்டிக்காட்டியும், ஏற்கனவே தமிழகத்தில் உள்ள நீட் எதிர்ப்பையும் சுட்டிக்காட்டி இருதினங்களாக சமூகவலைதளங்கள் உள்ளிட்டவைகளில் பெரும் விவாதம் நடக்கிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா நீட் தேர்வை விமர்சித்து அறிக்கை வெளியிட்டார்.


latest tamil news
அதில், ‛நம் பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது, இனி பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்'. ‛கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது' எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் தேர்வுக்கு வாழ்த்து சொல்ல வேண்டி நாம் இப்போது ஆறுதல் சொல்ல வேண்டியிருக்கிறது என தெரிவித்தார்.

சூர்யாவின் இந்த அறிக்கையை அவரது ரசிகர்களும், நீட்டை எதிர்க்கும் அரசியல் கட்சியினரும் வைரலாக்கினர். அதேசமயம் நீதிமன்றத்தின் செயல்பாட்டை விமர்சித்து அறிக்கை வெளியிட்டதாக சூர்யா மீது சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டுமென்று கோரி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹிக்கு கடிதம் எழுதினார். இதனால் சமூகவலைதளங்களில் சூர்யாவிற்கு ஆதரவாக டிரண்ட் செய்து வந்தனர். அதேசமயம் நீட் தேர்வின் நன்மை பற்றியும் பலர் எடுத்துரைத்தனர்.


latest tamil news
இந்நிலையில் நடிகையும், பா.ஜ.வை சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் டுவிட்டரில் சூர்யாவின் அறிக்கையை சுட்டிக்காட்டி, ''நடிகர்களின் படங்கள் வெளியாகும் சமயத்தில் முதல்நாள் முதல் காட்சியின் போது ரசிகர்கள் தங்களது சொந்த பணத்தில் நடிகர்களுக்காக பேனர் வைக்கிறார்கள். சமயத்தில் அப்படி வைக்கும்போது தவறி விழுந்து உயிர் இழக்கின்றனர். இதற்காக சினிமாவையே தடை செய்து விடலாமா. தயவு செய்து மாணவர்களை தைரியமாக தேர்வை எதிர்கொள்ள சொல்லி ஊக்கப்படுத்துங்கள். மருத்துவர்களுக்கு ஒவ்வொரு நாளும் நோயாளிகளை பரிசோதிக்கும் போது அதுவும் ஒரு வித பரீட்சை தான்'' என பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (224)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalaichelvan k.s. - coimbatore,இந்தியா
19-செப்-202022:44:37 IST Report Abuse
kalaichelvan k.s. 1 தரமான மருத்துவர், மெடிக்கல் காலேஜில் தான் உருவாகிறார் . நீட் ஆல் அல்ல. 2 கோச்சிங் கிளாஸ் போகாம யாரும் நீட்டில் வெற்றிபெறுவது இல்லை.அப்புறம் பிளஸ் 2 எதுக்கு படிக்கணும். அரசு பள்ளியில் படிக்கும் பய்யன் கோச்சிங் போக முடியாது. 1,50,000 பேர் 1,00,000 கொடுத்து கோச்சிங் படிக்க கிடைக்கும் வருமானம் 1500 கோடி. 3 பிளஸ் 2 ல 1100 மார்க் எடுப்பவன் முட்டாளா? மனப்பாடம் பன்றான் சொல்றவங்க, ஏன் எல்லாரும் அதிக மார்க் எடுப்பதில்லை என பார்க்கணும். 4 85 % சீட் அந்தந்த மாநில மாணவர்களுக்கு தான். இதுக்கு எதற்கு இந்தியா லெவலில் டெஸ்டு. மீதி 15 % க்கு மட்டும் நீட் வைக்க வேண்டியதுதானே. 5 . செலவு செய்து நீட் கோச்சிங் போறவன் ஏன் அரசு மருத்துவ கல்லூரிக்கு படிக்க வரணும். 6 நீட்ல 720 கு 128 வாங்கி காசு குடுத்து தனியார் கல்லூரியில் சீட் வாங்கி படிப்பவன் தரம் நல்ல இருக்கும் போது பிளஸ் 2 ல 1100 வாங்குறவன் தரம் நல்ல இருக்காதா கருணாநிதி சமசீர் கல்வி கொண்டு வந்து கெடுத்தார்னா admk dmk காலத்தில் காலேஜ் எல்லாம் நல்ல இருக்கு. அதனால தான் NEET வைத்து பசங்கள சேத்தரம். BJP க்கு தமிழ் நாட்ல ஜெயிக்கணும்னா , இங்க இருக்கும் மக்களை எப்படி மயக்க வேண்டும் என தெரியணும். அப்படி நடக்கற மாதிரி எனக்கு தெரியல. வட இந்திய formula (ராமர், முருகர், விநாயகர்,மதம்) இங்க வேலை செய்யும் என எனக்கு தோணலை
Rate this:
Cancel
kalai - bishan,சிங்கப்பூர்
19-செப்-202016:59:30 IST Report Abuse
kalai எப்படி பேனர் விபத்தையும் தற்கொலையும் ஒப்பிடமுடியும். கொஞ்சமாச்சும் யோசிக்க வேண்டாமா. அறிவு முதிர்ச்சி அவசியம். நீட் வேண்டுமா, வேண்டாமா என்பது தனி விவாதம், நிறைய மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் நிலையில் அதை சரி செய்ய மத்திய அரசு , மாநில அரசு என்ன செய்தது.
Rate this:
Cancel
தாமரை கருகும் - சென்னை,இந்தியா
19-செப்-202008:10:16 IST Report Abuse
தாமரை கருகும் பேனரை thane தடை செய்யணும், எதுக்கு சினிமாவை தடைசெய்யனும்? அரசியல் வாதிகளும் பேனர் காட்டுகிறார்க்ள தானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X