பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 4.5 லட்சத்தை கடந்த கொரோனா டிஸ்சார்ஜ் எண்ணிக்கை

Updated : செப் 15, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
CoronaVirus, CoronaCases, Tamilnadu, Discharge, TN_CoronaUpdates, TN_Health, TN_FightsCorona, Corona, TNGovt, Covid-19, PositiveCases, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (செப்.,14) ஒரே நாளில் 5,799 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4.53 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,752 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,742 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 10 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,08,511 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 170 ஆய்வகங்கள் (அரசு-65 மற்றும் தனியார்-105) மூலமாக, இன்று மட்டும் 80,123 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 59 லட்சத்து 68 ஆயிரத்து 209 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.


latest tamil news



இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,153 பேர் ஆண்கள், 2,599 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 3,06,354 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 2,02,128 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,799 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 53 ஆயிரத்து 165 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 53 பேர் உயிரிழந்தனர். அதில், 19 பேர் தனியார் மருத்துவமனையிலும், 34 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 8,434 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,912 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 22 ஆயிரத்து 006 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 4 லட்சத்து 20 ஆயிரத்து 043 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 66 ஆயிரத்து 462 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
15-செப்-202016:22:52 IST Report Abuse
Lion Drsekar நல்ல வேலை இரயில் பேட்டிகள் மக்களின் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுவது பாராட்டப்படவேண்டும், ஆனால் வந்த செய்திகள் சூப்பர் . அங்குதான் நம்மவர்கள் நிற்கிறார்கள், இல்லாதது ஒன்றில்லை என்ற பாடல் திரு மஹாலிங்கம் நடிகர் பாடகர் பாடியது மிக அற்புதம், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X