ராஜ்யசபா துணை தலைவராக ஹரிவன்ஷ் நாராயண் சிங் மீண்டும் தேர்வு

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
JD-U MP Harivansh re-elected Deputy Chairman of Rajya Sabha


புதுடில்லி: ராஜ்யசபா துணைதலைவராக மீண்டும் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தேர்வு செய்யப்பட்டார்.

பார்லி.மழைக்கால கூட்டத் தொடரில் இன்று ( செப்14ம் தேதி) இரு சபைகளும் கூடியது. முதல் நாளில் , ராஜ்ய சபா துணை தலைவர் தேர்வு நடந்தது. இதில் ஏற்கனவே தே.ஜ., கூட்டணி வேட்பாளராக,துணை தலைவர் பதவியில் இருந்து வந்த, ஹரிவன்ஷ் நாராயண் சிங் , மீண்டும் களம் இறங்கியுள்ள நிலையில் அவரை வெற்றி பெற வைக்க, பா.ஜ., மூத்த அமைச்சர்கள் முடிவெடுத்துள்ளனர்.


latest tamil news



எனினும் அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தரப்பில், பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியது. இதையடுத்து பொது வேட்பாளராக , ராஷ்டிரீய ஜனதா தள கட்சி எம்.பி., யான மனோஜ் ஜா நிறுத்தப்படலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று நடந்த பார்லி. முதல் நாள் கூட்டத்தொடரில் ஹரிவன்ஷ் நாராயண்சிங் மீண்டும் ராஜ்யசபா துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

பொருளாதாரம் படித்தவரான ஹரிவன்ஷ் நாராயண் சிங் கடந்த 2018-ம் ஆண்டு ராஜ்யசபா துணை தலைவராக தேர்வு பெற்றார். கடந்த ஏப்ரல் 2020-ல் இவரது பதவிகாலம் நிறைவடைந்த நிலையில் மீண்டும் அதே பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹிரிவன்ஷ் நாராயண்சிங்கிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
15-செப்-202003:49:45 IST Report Abuse
J.V. Iyer நம்ம ஊர் எம்பீக்கள் டெல்லி சென்று ஏதாவது உருப்படியாக செய்வார்களா? அல்லது எப்போதும் போல கொடிபிடித்து காட்டுக்கத்தலாக கத்திவிட்டு, அவர்கள் குடும்பத்திற்கு தேவையானவற்றை கூழைக்கும்பிடு போட்டு வாங்கி வருவார்களா? இதைத்தானே எதிர்பார்த்து தமிழ்நாட்டில் அவர்களை டெல்லிக்கு அனுப்பினார்கள்?
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
14-செப்-202020:06:43 IST Report Abuse
Balasubramanian Ramanathan சோனியா ஒரு ராஜ தந்திரி என்பது பரிகிறதா. கிளப்பிவிட்டடுவிட்டு கிளம்பி போய்விட்டார். அழகிரி ஐயா எப்படி நம்ம விளையாட்டு.
Rate this:
Cancel
Rohin - jk ,இந்தியா
14-செப்-202019:16:52 IST Report Abuse
Rohin வாழ்த்துக்கள் ஐயா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X