பொது செய்தி

இந்தியா

அஜ்மல் கசாப்பை அடையாளம் காட்டிய சிறுமிக்கு கிடைத்தது அரசு வீடு

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
'Devika Rotawan was 9-year-old when she identified Kasab' - Uddhav Thackeray urged to allot a house to girl

மும்பை: மும்பை தாக்குதல் வழக்கில் போலீசிடம் உயிருடன் சிக்கிய முக்கிய குற்றவாளியும் தூக்கிலிடப்பட்ட பயங்கரவாதியுமான அஜ்மல் கசாப்பை அடையாளம் காட்டிய இளம் பெண்ணிற்கு மஹாராஷ்டிரா அரசு வீடு வழங்கியுள்ளது.

கடந்த 2008 நவ., 26ல் நாட்டையே அதிரவைத்த மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் சம்பவத்தில் தாக்குதலின் போது உயிருடன் பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கசாப். இவனை கோர்ட்டில் அடையாளம் காட்டினார் தேவிகா ரோட்டோவான் என்ற 9 வயது சிறுமி. தற்போது இவருக்கு 21 வயதாகிறது.


latest tamil news
இவற்றை பற்றி தகவலறிந்த ஜிசான் சித்திக் என்ற எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து விவரம் கேட்டார். பின்னர் தனது டுவிட்டரில் பதிவேற்றினார்.

அதில் பயங்கரவாதியை அடையாளம் காட்டிய வீர சிறுமி தேவிகா ரோட்டோவான் குடும்ப வறுமையால் தவிக்கிறார். அவருக்கு அரசு வீடு ஒதுக்கி உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து மஹாராஷ்டிரா ஆளும் சிவசேனா கட்சி முதல்வர் உத்தவ் உத்தரவின்படி இளம் பெண்ணிற்கு அரசு சார்பில் சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் வீடு வழங்கப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா
16-செப்-202015:03:40 IST Report Abuse
Madhusoodhana Ramachandran ஏன் தமில் நாட்டில் விஞ்ஜான ஊழல் புரிந்து கோர்ட்டால் பட்டம் வாங்கியவரை மறந்து விட்டீர்களா?
Rate this:
Cancel
Karthik - Coimbatore,இந்தியா
15-செப்-202011:22:22 IST Report Abuse
Karthik கங்கனா ரணாவத் பிரச்சனையை திசை திருப்புவதட்காக இப்படி ஒரு செயலை மும்பை அரசு செய்துள்ளது....
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
15-செப்-202018:40:13 IST Report Abuse
Endrum Indian1000% சரியான வார்த்தை பதம்...
Rate this:
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
15-செப்-202010:45:46 IST Report Abuse
S.P. Barucha ஐவரும் அடையாளம் காட்டாமல் இருந்திருந்தால் அஜ்மல் கசாப்பை குற்றவாளி இல்லையென இந்திய நீதிமன்றங்கள் விடுதலை செய்திருக்கும். சாட்சி காரணத்தை வைத்தே லட்சம் கொலைகாரர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். கொலை குற்றவாளியையும்,பெண்களுக்கு எதிராக வன்முறை,கற்பழிப்பு, தீவிரவாதிகளையும் மிகவும் பாசமாகவும், பண்புடனும் நேசிக்கும் சட்டம் இந்தியாவில் மட்டும்தான் இருக்க முடியும். மத ரீதியாக வழிபாடு நடத்த அனுமதி, உணவு, உடை எல்லாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X