ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹிடே சுகா தேர்வு

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
japan, new pm, yoshihide suga, elected, ஜப்பான், புதிய பிரதமர், யோஷிஹிடே சுகா, தேர்வு

டோக்கியா: ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹிடே சுகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானின் நீண்ட நாள் பிரதமராக இருந்த ஷின்சோ அபே உடல் நலம் பாதிப்பு காரணமாக பதவி விலகினார். இதையடுத்து ஆளும் மிதவாத கட்சியின் தலைவர் பதவிக்கு சுகாவுடன் அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிகரு இஷிபா மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் புமியோ கிஷிடா மூவரும் போட்டியிட்டனர்.

அந்நாட்டு பார்லி.,யின் மேல் சபை மற்றும் கீழ் சபை உறுப்பினர்கள் 534 பேர் புதிய ஆளும் கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க ஓட்டளித்தனர். இதில் 377 ஓட்டுகளை பெற்று யோஷிஹிடே சுகா பெரும் வெற்றி பெற்றார். சிகரு இஷிபா 68 ஓட்டுகளும், முன்னாள் வெளியுறவு அமைச்சர் 89 ஓட்டுகளும் பெற்றனர்.


latest tamil news


71 வயது நிரம்பிய யோஷிஹிடே சுகா வடக்கு ஜப்பானைச் சேர்ந்த ஸ்டராபெர்ரி பயிரிடும் விவசாயி மகன் ஆவார். மேலும் இவர், முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் தீவிர ஆதரவாளர். ஜப்பானில் ஆளும் கட்சியின் தலைவர் பிரதமர் பதவி வகிப்பது வழக்கம் என்பதால் யோஷிஹிடே சுகா அடுத்தாண்டு செப்.,மாதம் வரை பதவி வகிப்பார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
14-செப்-202021:47:09 IST Report Abuse
Ramesh Sargam புதியதாக பதவி ஏற்க இருக்கும் யோஷிஹிடே சுகாவிற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
14-செப்-202020:28:19 IST Report Abuse
Rajagopal அப்ப நம்ம சுடலையாரு? அவரு சப்பானிய பிரதமர் இல்லீங்களா? எங்க நம்ம சூரியாவ கூப்புடுங்க ஒடனே.
Rate this:
Cancel
Rohin - jk ,இந்தியா
14-செப்-202020:12:32 IST Report Abuse
Rohin நாங்கெல்லாம் நடக்கவே முடியாம போனா கூட படுத்துகிட்டே ஆட்சி செய்வோம், எங்களுக்கு அவ்வளோ பதவி வெறி மற்றும் கடைசி வரைக்கும் கொள்ளையடிக்கிறதுல அவ்வளோ ஆசை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X