பொது செய்தி

தமிழ்நாடு

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை வேண்டாம்: 6 முன்னாள் நீதிபதிகள் ஆதரவு

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (75)
Share
Advertisement
Suriya, NEET, former judges, NEET exam

சென்னை: நடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவையில்லை என சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு, முன்னாள் நீதிபதிகள் 6 பேர் கடிதம் எழுதி உள்ளனர்.

நீட் தேர்வை விமர்சித்து, நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தார். நீதிமன்றத்துக்கு எதிராக கருத்து கூறியதற்காக, சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி சுப்ரமணியம் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், முன்னாள் நீதிபதிகள் 6 பேர் சூர்யாவுக்கு ஆதரவாக கடிதம் எழுதி உள்ளனர்.


latest tamil news


சென்னை ஐகோர்ட் நீதிபதி ஏ.பி.சாஹிக்கு, முன்னாள் நீதிபதிகள் சந்துரு, பாட்ஷா, சுதந்திரம், கண்ணன், ஹரிபரந்தாமன் மற்றும் அக்பர் அலி ஆகிய 6 பேரும் எழுதியிருக்கும் கடிதத்தில், தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்க சூர்யா மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். மேலும், மாணவர்கள் பலியானதால், சூர்யாவின் கருத்துக்களை பெரியதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பது அவசியமல்ல எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
16-செப்-202005:39:31 IST Report Abuse
meenakshisundaram இவங்க தான் பிற்கால உதாரண அரசியல் வாதிகளா?-சட்டம் படிக்கிறது எல்லோரையும் மன்னிக்கத்தானா?
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
15-செப்-202014:45:05 IST Report Abuse
r.sundaram எங்கேயோ இடிக்கிதே. சம்மன் இல்லாமல் இவர்கள் ஏன் ஆஜராக வேண்டும்?
Rate this:
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
15-செப்-202013:58:34 IST Report Abuse
S.P. Barucha சூர்யா தண்டிக்கப்படவேண்டும். நாட்டை குட்டிசுவராக்கும் பேச்சு. நீதிமன்ற விவகாரத்தில் முன்னாள் நீதிபதிகள் ஆதரவு செய்ய என்ன அதிகாரம் இருக்கிறது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X