பொது செய்தி

தமிழ்நாடு

கூடலூரில் பூத்து குலுங்கும் குறிச்சி மலர்கள்

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020
Share
Advertisement
கூடலூரில் பூத்து குலுங்கும் குறிச்சி மலர்கள்

கூடலூர்: கூடலூர் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை நடுவட்டம் பகுதியில் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்க துவங்கியுள்ளது.


latest tamil news



நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம், பல அரியவகை பூக்களின் இருப்பிடமாக உள்ளது . இங்கு 33 வகையான குறிஞ்சி மலர் வகைகள் உள்ளன. இவைகள், ஓர் ஆண்டு முதல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலர கூடியவை. கூடலூர் பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜீன் போல் தாவர மையத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள், பூத்துக் குலுங்கின. கடந்த 2018 ல் கல்லட்டி, கோத்தகிரி மலைப்பகுதியில், இவ்வகை குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கின.


latest tamil news




தற்போது கூடலூர் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் ஆகாசபாலம், நடுவட்டம் பகுதி சாலை ஓரங்களில் சிறு குறிஞ்சி மலர்கள் பூத்து குழுங்குகின்றன. இதன் அழகை உள்ளூர் மக்களும், இவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.


latest tamil news


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X