அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஹிந்தியை காப்பாற்றுவதைவிட இந்தியர்களை காப்பாற்றுங்கள்: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் பதில்

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (62)
Share
Advertisement
Hindi Language, Amit Shah, Stalin, MK Stalin, DMK, BJP

சென்னை: ஹிந்தியைக் காப்பாற்றுவதை விட, கொரோனாவிலிருந்து இந்தியர்களைக் காப்பாற்றுங்கள் என அமித் ஷாவுக்கு ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

ஹிந்தி தினத்தையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டுவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ஹிந்தி நாட்டை ஒருங்கிணைக்கிறது எனவும், வேறு எந்த மொழிகளுடனும் ஹிந்தி போட்டியிடவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், திமுக தலைவர் ஸ்டாலின், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இந்திய நாட்டின் உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா, ஹிந்தி மொழி இந்நாட்டை ஒருங்கிணைப்பதாகச் சொல்லி இருக்கிறார். பன்முகத் தன்மையுடன் பரந்து விரிந்திருக்கும் இந்நாட்டை, ஒரு சில மாநில மக்கள் மட்டுமே பேசும் மொழி எப்படி ஒருங்கிணைக்க முடியும்?


latest tamil news



வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் கெடுக்கும் ஒன்றாகத்தான் ஹிந்தி இருக்கிறது என்பதை அமித்ஷா உணர வேண்டும். ஹிந்தியைக் காப்பாற்றுவதை விட, கொரோனாவில் இருந்து இந்தியரைக் காப்பாற்றுவதில் அவர் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
16-செப்-202005:59:31 IST Report Abuse
meenakshisundaram ஸ்டாலின் -'அச்சா ஹை '
Rate this:
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
15-செப்-202018:37:07 IST Report Abuse
srinivasan பப்புவிற்கு சரியான போட்டி
Rate this:
Cancel
Ramesh - CHENNAI,இந்தியா
15-செப்-202011:23:49 IST Report Abuse
Ramesh தலைவரே, துரைமுருகன் நடத்தற பள்ளிக்கூடம் Kingston & மாஜி அமைச்சர் வேலு நடத்தற Jeva Velu பள்ளிக்கூடம் பத்தி ஞாபகம் இல்லாம இப்படி அறிக்கை விடாதீங்க தலைவரே. அவிங்க பள்ளிக்கூடத்துல ஹிந்தியும் இருக்கு அப்புறம் 7th ஸ்டேண்டர்டுல இருந்து NEET ட்ரைனிங் தரங்காலம். முதல்ல நம்ம கட்சியை பார்ப்போம் அப்புறம் டெல்லிக்கு போலாம் தலைவரே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X