மாலியில் இடைக்கால அரசு

Added : செப் 14, 2020
Share
Advertisement



பமோகா: மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில், இடைக்கால அரசு அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மாலியில் ராணுவப் புரட்சி ஏற்பட்டு, ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. மூன்று ஆண்டுகளுக்கு ஆட்சியைத் தொடர உள்ளதாக, ராணுவ ஆட்சிக் குழு அறிவித்திருந்தது. இதற்கு, நாட்டில் உள்ள அரசியல் மற்றும் சமூகக் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், மேற்கு ஆப்ரிக்க நாடுகள் அடங்கிய அமைப்பும் எச்சரித்தது. அதையடுத்து, மூன்று நாட்கள் நடந்த பேச்சில், 18 மாதங்களுக்கான இடைக்கால அரசு அமைக்க, ராணுவ ஆட்சிக் குழு முன் வந்துள்ளது. அதன்பிறகு, தேர்தல் நடத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X