5 மாநிலங்களில் இருந்து 60% கொரோனா பாதிப்பு: மத்திய சுகாதாரதுறை

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி : இந்தியாவின் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோரில் 60 சதவீதம் மஹாராஷ்டிரா உள்ளிட்ட 5 முக்கிய மாநிலங்களில் இருந்து பதிவாகுவதாக மத்திய சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.latest tamil newsஇந்தியாவில் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்படுவோர் மற்றும் பலியாவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளில் 60 % க்கும் அதிகமானவை மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களில் இருந்து பதிவாகி வருவதாக மத்திய சுகாதாரதுறை இன்று (செப்.,14) தெரிவித்தது. இந்தியாவின் கொரோனா மீட்பு விகிதமும் 78 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு புதிதாக 92,071 பேர் பாதிக்கப்பட்டதுடன், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46.48 லட்சமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கான இறப்பு எண்ணிக்கை 79,722 ஆக அதிகரித்தது. கொரோனா பாதிப்புகளில் இருந்து ஒரே நாளில் 77,512 பேர் குணமடைந்தனர்.


latest tamil newsகொரோனாவிலிருந்து மீள்பவர்கள் எண்ணிக்கை இப்போது 27,93,509 ஆக உள்ளது. நாட்டில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 9,86,598 ஆக உயர்ந்து உள்ளதாக சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்தது.

மொத்த கொரோனா பாதிப்புகளில் 60 சதவீதம், [ மகாராஷ்டிரா (21.9 சதவீதம்), ஆந்திரா (11.7 சதவீதம்), தமிழ்நாடு (10.4 சதவீதம்), கர்நாடகா (9.5 சதவீதம்) மற்றும் உத்தரப் பிரதேசம் (6.4 சதவீதம்) ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்தவை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 53 % மஹாராஷ்டிரா, உ.பி., மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பதிவாகியது. இவற்றை தொடர்ந்து தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் ஆந்திரா ஆகியவற்றில் இருந்து பதிவாகியதாகவும் சுகாதாரதுறை தெரிவித்தது.

நேற்று பதிவான இறப்புகளில், 36 சதவீதத்திற்கும் அதிகமானவை மகாராஷ்டிராவைச் சேர்ந்தவை (416 இறப்புகள்) என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஐசிஎம்ஆர் கூற்றுபடி, மொத்தம் 5,72,39,428 மாதிரிகள் செப்.,13 வரை சோதனை செய்யப்பட்டுள்ளன, 9,78,500 மாதிரிகள் நேற்று ஒருநாளில் சோதனை செய்யப்பட்டுள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V Rajasekaran - Chennai,இந்தியா
15-செப்-202008:13:35 IST Report Abuse
V Rajasekaran By analysing the medical reports of patients from different states we have to find out the reasons and publish it. Other reasons like literacy, food habits etc... should also be taken into account while arriving at the conclusion. Researchers should be encouraged to do this type of research which helps the people and also indirectly useful for the economy of the country.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X