பொது செய்தி

இந்தியா

ரத்தம் உறைதலை தடுக்கும் கருவி உள்நாட்டிலேயே தயாரிப்பு

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

திருவனந்தபுரம்: நரம்புகளின் ஆழத்தில் ரத்தம் உறைதலை தடுக்கும் கருவி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் திருவனந்தபுரத்திலுள்ள சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இதனை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.



latest tamil news


இக்கருவி மூலம் குறைவான செலவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை காப்பாற்ற முடியும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நீண்ட நாட்களாக நடக்க முடியாமல் இருக்கும் நோயாளிகள், படுக்கையிலேயே இருப்பவர்கள், அறுவை சிகிச்சைக்குப்பின் நடக்க முடியாமல் இருப்பவர்கள், கால் முடக்கத்தால் அவதிப்படுபவர்கள், வலி, வீக்கத்தால் அவதிப்படுபவர்கள் போன்றவர்களுக்கு இக்கருவி நிவாரணம் அளிக்கும் என்று நம்பப்படுகிறது.


latest tamil news



இந்த உபகரணத்தால் ரத்தநாளங்களில் அழுத்தம் உருவாக்கப்பட்டு ரத்த ஓட்டம் சீராக்கப்படுகிறது. உதாரணமாக கால்களில் ரத்தநாளங்களில் ரத்த ஓட்டம் சீராக்க இது உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மார்க்கெட்டில் இந்த உபகரணத்தின் விலை ரூ 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை உள்ள நிலையில் கேரள விஞ்ஞானிகளின் புதிய தயாரிப்பின் விலை ரூ 1 லட்சம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
15-செப்-202007:06:10 IST Report Abuse
ocean இக்கருவி வயதானவர்களுக்கு கிடைத்திருக்கும் அரிய சிகிச்சை முறை.
Rate this:
Cancel
ocean - Kadappa,இந்தியா
15-செப்-202007:02:35 IST Report Abuse
ocean உடலின் ரத்த ஓட்டத்தை நகராமல் நிறுத்தி உறைய வைப்பது அளவுக்கு மீறிய சளி உருண்டை. அதை குரானா என்கிறார்கள். குரோனாவை ஒழிப்பதில் இக்கருவி முக்கிய பங்காற்றும்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
14-செப்-202021:01:57 IST Report Abuse
RajanRajan கிரேட் வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X