பொது செய்தி

இந்தியா

டில்லி மெட்ரோ ரயிலுக்குள் சமூக இடைவெளிக்கான அடையாளங்கள் பலப்படுத்தப்படுகிறது ; டிஎம்ஆர்சி

Added : செப் 14, 2020
Share
Advertisement
டில்லி, கொரோனா, மெட்ரோ ரயில் சேவை, சமூக இடைவெளி, அடையாளங்கள், டிஎம்ஆர்சி, பயணிகள், சுகாதார நடவடிக்கை

புதுடில்லி: டில்லி மெட்ரோ ரயிலில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கான அடையாளத்தை மேலும் பலப்படுத்துவதாக டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பொரேஷன் (DMRC) தெரிவித்துள்ளது.

டில்லியில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. டில்லியின் மெட்ரோ ரயில் கார்ப்பொரேஷன் (DMRC) இன்று (செப்.,14) ரயில்களுக்குள் மாற்று இருக்கைகளில் ஸ்டிக்கர்களை தவிர, சமூக இடைவெளிக்கான அடையாளங்களை வலுப்படுத்துவதாக கூறியது. டில்லியில் செப்.,11 முதல் அனைத்து முக்கிய வழித் தடங்களும் செயல்பட்டு வருகின்றன. 800 இருக்கைகளில் ஏற்கனவே floor markers பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 1400 மெட்ரோ ரயில் பெட்டிகளில் floor markers வைக்கப்படும் எனவும் DMRC தெரிவித்தது.

டில்லியில் 169 நாட்களுக்கு பிறகு, செப்.,7 முதல் DMRC மெட்ரோ ரயில் சேவையை ஓரளவு தொடங்கியது. நேற்று செப்.,13 அன்று 3 லட்சத்திற்கும் அதிகமான பயணங்களைக் கண்டதாகக் கூறப்படுகிறது. சராசரியாக டில்லி மெட்ரோவில் 307248 பயணங்கள் இயக்கப்பட்டதாக கூறுகிறது. இன்று (செப்.,14) முதல் டில்லியில் தினமும் சராசரியாக 4,500 பயணங்களை இயக்கும் என டில்லி மெட்ரோ கார்ப்பொரேஷன் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது பழைய அட்டவணையின்படி, அதன் நேரங்களுக்கு ஏற்ப ரயில் சேவை காலை 6 முதல் இரவு 11 மணி வரை இயங்கும். கொரோனா வைரஸ் பாதிப்புகளின் மத்தியில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய DMRC பல கடுமையான கொரோனா நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ரயில் நிலையங்கள் / ரயில்களில் நுழையும் போது மற்றும் முழு பயணத்தின் போதும் அனைத்து பயணிகளுக்கும் face mask / cover அணிவது கட்டாயமாக இருக்கும். மேலும் பயணிகளின் சுகாதார நிலைகளை புதுப்பிக்க 'Aarogya Setu App' பயன்படுத்த அறிவுறுத்தப்படும். அனைத்து பயணிகளும் நுழைவு / வேகமான இடத்திலேயே வெப்ப பரிசோதனை மற்றும் கை சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். கொரோனா தொடர்பாக வெப்பநிலை அல்லது அடையாளம் கொண்ட பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் அருகிலுள்ள மருத்துவ மையத்திற்கு புகாரளிக்க அறிவுறுத்தப்படுவார்கள்.

இதற்கிடையில் டில்லியில் நேற்று (செப்.,13) கொரோனா எண்ணிக்கை 2.18 லட்சமாக அதிகரித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4,235 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. தற்போது வரை டில்லியில் நோய் தொற்றுக்கு 4,744 பேர் பலியாகி உள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில், இது ஐந்தாவது நாளாக டில்லி தினசரியாக 4,000 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகளை பதிவு செய்தது.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X