பீதி: 30 எம்.பி.,க்களுக்கு கொரோனா: பார்லி.யில் பெரும் பரபரப்பு

Updated : செப் 16, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: மழைக்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கிய நிலையில், பார்லிமென்டிற்கு வந்திருந்த, 30 எம்.பி.,க்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், சக எம்.பி.,க்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், ஜூலையில் நடந்திருக்க வேண்டும். கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக கூட்டத்தொடர் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், கொரோனா
எம்.பி., கொரோனா, பீதி, பார்லி.,  பரபரப்பு

புதுடில்லி: மழைக்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கிய நிலையில், பார்லிமென்டிற்கு வந்திருந்த, 30 எம்.பி.,க்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், சக எம்.பி.,க்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், ஜூலையில் நடந்திருக்க வேண்டும். கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக கூட்டத்தொடர் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், கூட்டத்தொடர் நேற்று துவங்கியது.


தடுப்புகள்



முதல் நாளான நேற்று, லோக்சபா, காலை, 9:00 மணிக்கு துவங்கி, பகல், 1:00 மணி வரை நடந்தது. ராஜ்யசபா அலுவல்கள், மாலை, 3:00 மணிக்கு துவங்கி, இரவு, 7:00 மணி வரை நடந்தது.
இனி வரும் நாட்களில், ராஜ்யசபா அலுவல்கள் காலையிலும், லோக்சபா அலுவல்கள் மாலையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

* கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உறுப்பினர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வந்திருந்தனர்
* உறுப்பினர்கள் அமரும் இடத்துக்கு முன், 'பிளாஸ்டிக்' தடுப்புகள் அமைக்கப்பட்டுஇருந்தன
* லோக்சபா சேம்பரில், 200 உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர்; மேலும், 30 பேருக்கு, பார்வையாளர் மாடத்தில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது
* சபை நடவடிக்கைகளை அனைவரும் காண்பதற்கு வசதியாக லோக்சபா சேம்பரில் பிரமாண்ட டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டிருந்தது
* வருகைப் பதிவேட்டில், பேனாவால் கையெழுத்திடுவது மற்றும், 'பயோமெட்ரிக்' கருவியில் விரல் வைப்பது என்றிருந்த வழக்கத்திற்கு மாறாக, பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருந்த செயலியில், உறுப்பினர்கள் வருகையை பதிவு செய்தனர்
* வழக்கமாக நீளமான இருக்கையில், ஆறு உறுப்பினர்கள் அமர்ந்திருப்பர். சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில், நேற்று, இந்த இருக்கையில் மூன்று உறுப் பினர்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர்
* ஆளும் கட்சி வரிசையில், முதல் எண் குறிப்பிடப்பட்டிருந்த இருக்கையில், பிரதமர் மோடியும், இரண்டாவது எண்ணில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், மூன்றாவது எண் உடைய இருக்கையில், விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் அமர்ந்திருந்தனர்
* எதிர்க்கட்சியினருக்கான முன் வரிசையில், தி.மு.க., வின், டி.ஆர்.பாலு, காங்கிரசின் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அமர்ந்துஇருந்தனர்
* இரண்டாவது வரிசையில் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்
* பிரதமர் மோடி சபைக்கு வந்தபோது, பா.ஜ., வினர், 'பாரத் மாதா கி ஜே' என, முழக்கம்மிட்டனர். அனைத்து உறுப்பினர்களுக்கும் பிரதமர் மோடி வணக்கம் தெரிவித்தார்
* பெரும்பாலான எம்.பி.,க்கள் முக கவசம் அணிந்திருந்தனர். திரிணமுல் காங்கிரசின் கல்யாண் பானர்ஜி உள்ளிட்ட சிலர், தங்கள் முகங்களில், 'பிளாஸ்டிக்' கவசம் அணிந்திருந்தனர்.இதற்கிடையே, பார்லி., நடவடிக்கைகளில் பங்கேற்க வந்த எம்.பி.,க்கள் அனைவருக்கும், நேற்று முன்தினமும், அதற்கு முந்தைய நாளும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.


பாதிப்பு



இதற்கான முடிவுகள், நேற்று காலையில் தான், சம்பந்தபட்டவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதில், இரு சபைகளையும் சேர்ந்த, 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.ஆனால், இவர்களில் சிலர், தங்களுக்கு வந்த தகவலை பார்க்காமலேயே, சபை அலுவல்களில் பங்கேற்றதால், சக எம்.பி.,க்கள், பார்லிமென்ட் அதிகாரிகள், ஊழியர்
களிடையே பீதி ஏற்பட்டுஉள்ளது.லோக்சபா எம்.பி.,க் களில், பா.ஜ.,வைச் சேர்ந்த மீனாட்சி லேகி உள்ளிட்ட, 12 பேருக்கும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசை சேர்ந்த இருவருக்கும், ராஷ்ட்ரிய லோக் தந்திரிக், சிவசேனா, தி.மு.க., ஆகிய கட்சிகளைச் சேர்ந்த, தலா ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன், பார்லி., அலுவல்களில் பங்கேற்கும் ஊழியர்கள், அதிகாரிகள், 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.


பார்லி., துளிகள்



* ராஜ்யசபா நேற்று துவங்கியதும், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, எம்.பி.,க்கள் அமர் சிங், பெனி பிரசாத் வர்மா, வீரேந்திர குமார் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, ஒரு மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது
* தி.மு.க., வின் திருச்சி சிவா, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சிபு சோரன், பா.ஜ., வைச் சேர்ந்த செய்யது ஜாபர் இஸ்லாம் உள்ளிட்ட, 14 பேர், ராஜ்யசபா எம்.பி.,க்களாக நேற்று பதவியேற்றனர்
* ஹோமியோபதி முறைக்கான தேசிய கமிஷன் அமைப்பது மற்றும் இந்திய மருத்துவ முறைக்கான தேசிய கமிஷன் அமைப்பது குறித்த இரண்டு மசோதாக்களுக்கு பார்லிமென்டில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
15-செப்-202021:11:20 IST Report Abuse
J.Isaac அரசு ஊருக்குத்தான் உபதேசம் செய்கிறது. தற்சார்பு ஒத்திகை
Rate this:
Cancel
vasan - doha,கத்தார்
15-செப்-202016:23:45 IST Report Abuse
vasan இந்த அழகில் தேர்வுகளை நடத்தி மாணவர்களின் நிலையை பரிதாபமாக தள்ளப்பட்டுள்ளனர்...........
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
15-செப்-202007:37:46 IST Report Abuse
Balasubramanian Ramanathan எல்லோரையும் அங்கேயே அமுக்கி வையுங்கள். தப்லீக் ஜமாஅத் துக்கு போட்டியா கிளம்பிட போறாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X