அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வின் 'நீட் எதிர்ப்பு' வெறும் நாடகம்: ஸ்டாலின்

Updated : செப் 16, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (46)
Share
Advertisement
 அ.தி.மு.க.,'நீட் எதிர்ப்பு'  வெறும் நாடகம்: ஸ்டாலின்

சென்னை:''அ.தி.மு.க., அரசின், 'நீட்' எதிர்ப்பு, வெறும் நாடகம்,'' என, எதிர்கட்சி தலைவர், ஸ்டாலின் கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
சட்டசபையில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி, எம்.எல்.ஏ.,க்கள் போன்றோருக்கு இரங்கல் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.'நீட்' தேர்வால் இறந்த, மாணவ - மாணவியர் பெயர்களையும் சேர்த்து தீர்மானம் நிறைவேற்றும்படி கோரினேன். அது, ஏற்கப்படாதது கண்டனத்திற்குரியது.இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் தான், சட்டசபை நடைபெற உள்ளது; அது, போதாது. நாட்டில் பல்வேறு பிரச்னைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், அவர்கள் ஏற்கவில்லை.
ஏற்கனவே, 20 கவன ஈர்ப்பு தீர்மானங்ளையும், தனித் தீர்மானங்களையும், விவாதத்திற்கு எடுத்து கொள்ள வேண்டும் என, 'நோட்டீஸ்' அளித்து உள்ளோம். இரண்டு நாட்களில், அவற்றை எல்லாம் எப்படி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் போகின்றனர் என்பது கேள்விக்குறியாக உள்ளது.முக்கியமானது, 'நீட்' பிரச்னை. இதனால், மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை குறித்து பேச வேண்டும்.

புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை போன்றவை குறித்தும் பேசி, விளக்கம் பெற வேண்டும்.இது தவிர்த்து, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும், அவரவர் தொகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து, விவாதிக்க வேண்டும் என, நோட்டீசில் தெரிவித்துள்ளோம்.அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையிலும், கட்சி பொதுக்குழு கூட்டத்திலும், 'நீட்' தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதிலும் ஒப்புதல் தந்துள்ளனர். இதெல்லாம் ஒரு நாடகம்; மக்களை ஏமாற்றுவதற்கான நாடகம். இதுவரை ஒரு முறை கூட, முதல்வரோ, சம்பந்தப்பட்ட அமைச்சர்களோ, டில்லி சென்று பிரதமரையோ, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களையோ சந்தித்து வலியுறுத்தவில்லை. போதிய அழுத்தம் தரவில்லை என்பது தான் என் குற்றச்சாட்டு.
இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.


'ஹிந்தியை விட இந்தியரை காப்பாற்ற வேண்டும்'


:
'ஹிந்தியை காப்பாற்றுவதை விட, கொரோனா பாதிப்பில் இருந்து, இந்தியரை காப்பாற்றுவதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
நாட்டின் உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா, ஹிந்தி மொழி இந்நாட்டை ஒருங்கிணைப்பதாக கூறி இருக்கிறார்.பன்முகத் தன்மையுடன் பரந்து விரிந்திருக்கும் இந்நாட்டை, ஒரு சில மாநில மக்கள் மட்டுமே பேசும் மொழி, எப்படி ஒருங்கிணைக்க முடியும்?வேற்றுமையில் ஒற்றுமை காணும், இந்தியாவின் ஒருமைப்பாட்டை கெடுக்கும் ஒன்றாகவே ஹிந்தி இருக்கிறது என்பதை, அமித்ஷா உணர வேண்டும். ஹிந்தியை காப்பாற்றுவதை விட, கொரோனா பாதிப்பில் இருந்து இந்தியரை காப்பாற்றுவதில், அவர் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.


முப்பெரும் விழா



தி.மு.க., தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்:
இன்று நடைபெறவுள்ள தி.மு.க., முப்பெரும் விழா வாயிலாக, நமக்குக் கிடைக்கிற ஊக்கமும், உற்சாகமும், அடுத்தடுத்து நாம் சந்திக்கும் களங்களுக்கேற்ற வலிமைத் தரக் கூடிவை. அடுத்தடுத்த வெற்றி விழாக்களுக்கான முன்னோட்டம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Alloliya,இந்தியா
15-செப்-202023:06:04 IST Report Abuse
Rajan சூசை வாயில வடை சுடரன்
Rate this:
Cancel
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
15-செப்-202022:18:39 IST Report Abuse
R.MURALIKRISHNAN நீட்டா தமிழ் பேச தெரியாதவனெல்லாம் நீட்டைபத்தி பேசறான்.தமிழ்நாட்டிற்கு தமிழனுக்கு திமுக வேணாம் போடா
Rate this:
Cancel
15-செப்-202020:31:34 IST Report Abuse
DMK  வந்தாதான் நாடு செழிக்கும் DMK வந்தால் மணீண்டும் NEET வந்திடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X