ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக நாடே அணி திரண்டுள்ளது

Updated : செப் 16, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக நாடே அணி திரண்டுள்ளது

பார்லிமென்ட் வளாகத்தில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று அளித்த பேட்டி:இந்திய - சீன எல்லையில் காவல் காக்கும் நம் வீரர்கள், கடினமான சூழலில் பணி புரிகின்றனர்.
இதுபோன்ற நேரத்தில், இந்திய வீரர்களுக்கு ஆதரவாக ஒட்டு மொத்த நாடும் அணி திரண்டு நிற்கிறது என்ற நல்ல செய்தியை, பார்லிமென்ட் வாயிலாக, நம் வீரர்களுக்கு அனுப்ப வேண்டும். இதற்கான கடமையும், பொறுப்பும் எம்.பி.,க்களுக்கு உள்ளது.அனைத்து எம்.பி.,க் களும் ஒரே குரலில் தங்கள் ஆதரவை, இந்திய வீரர்களுக்கு தெரிவிப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. பார்லிமென்டில் இந்த முறை முக்கியமான முடிவுகளும், விவாதங்களும் நடக்கும்.

எம்.பி.,க்கள், தங்கள் செயல்பாடுகள் வாயிலாக, பார்லிமென்டின் மதிப்பை கூட்ட வேண்டும். கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், எம்.பி.,க்கள், தங்கள் கடமையை ஆற்றுவதற்காக பார்லிமென்டிற்கு வந்துஉள்ளது, பாராட்டத்தக்கது. வைரஸ் பிரச்னையை கருத்தில் வைத்து, இந்த கூட்டத் தொடரில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அனைத்து, எம்.பி.,க்களும், கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை, நாம் அலட்சியமாக இருக்கக் கூடாது. தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.
எங்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும், அது, நம் நாட்டு மக்களுக்கு விரைவில் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு, பிரதமர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - Doha,கத்தார்
15-செப்-202016:51:36 IST Report Abuse
Tamilan இது என்ன வெட்டி ஜம்பம் என்று தெரியவில்லையே. இதுக்கு முன்னாடி இந்த நாட்டு மக்கள் ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக இல்லாமல், எதிர்த்தா இருந்தார்கள். எவன் ஒருவன் நாட்டு மக்களுக்கு எதுவுமே செய்யாமல் வாயிலே வடை சுட்டுகிட்டு திரிகிறானோ அவன் தான், ராணுவ வீரர்களின் சாதனைகளில் ஒழிந்து கொள்வது அல்லது எதிரி நாட்டில் இருந்து மிக பெரிய ஆபத்து நாட்டுக்கு இருப்பது போல பில்டப் கொடுப்பது. சீன அதிபரோடு ஆறு முறை, ஒட்டி உறவாடி விட்டு, அண்டை நாட்டுடன் நல்லுறவை பேணிக்காக்க முடியாமல் எல்லாத்தையும் கோட்டை விட்டு, இப்ப பேச்சி பார்.
Rate this:
mukundan - chennai,இந்தியா
15-செப்-202017:05:27 IST Report Abuse
mukundanபாஸ், மூளையை கழட்டி தமிழ் நாட்டுல வச்சுட்டு தோஹா போய்ட்டிங்களா? நீங்க எழுதினது பாத்தா அப்படித்தான் தெரியுது. அது சரி ஊபிஸ் கிட்ட வேற எதை எதிர்பாக்குறது....
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
15-செப்-202016:14:22 IST Report Abuse
Lion Drsekar இராணுவத்துக்காக மக்கள், மக்களுக்காக இராணுவத்தினர் ஆனால் யார் இருக்கவேண்டுமோ அவர்கள் எதிரி நாடுகளுடன் கைகோர்த்து இங்குள்ளவர்கள்போல் இருப்பது மிகக்கொடிய செயல், எதிர்காலத்தை கவனத்தில் கொள்ளாமல் தங்களின் இன்றய வாழ்வை மட்டுமே நினைவில் கொண்டு செயல்படுவது நல்லதல்ல. வந்தே மாதரம்
Rate this:
Cancel
15-செப்-202015:05:41 IST Report Abuse
அண்ணா வழியில் கலைஞர் ஆட்சி அமைப்போம் ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக நாடே திரண்டுள்ளது:: அனால் அவர்களை தான் CHOWKIDAAR காக்கவில்லை 42 ராணுவ வீர்ர்களை இழந்தோம் , 25 ராணுவ வீரார்கள் இறந்தனர் , சரி உங்கள் பின்னால் நாடு மக்கள் இருக்கிறார்களா அதை பார்த்தேர்களா மஸ்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X