சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இந்து முன்னணி ஆதரவாளர் கொலையில் 6 பேர் கைது

Added : செப் 14, 2020
Share
Advertisement
இந்து முன்னணி ஆதரவாளர் கொலையில் 6 பேர் கைது

கோவை : கோவையில், இந்து முன்னணி ஆதரவாளர் கொலை வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை ஆவாரம்பாளையம், தனலட்சுமி நகரை சேர்ந்த பிஜூ,40. ராம் நகர், கோகலே வீதியில் சோடா கடை நடத்தி வந்தார். இந்து முன்னணி ஆதரவாளரான இவர், வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். நேற்று கடை முன் நின்று கொண்டிருந்த போது, ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்கியும்,அரிவாளால் வெட்டியும் கொலை செய்தனர்.

காட்டூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரிக்கையில், நண்பர்கள் தகராறை, சமரசம் செய்து வைக்க முயன்ற போது ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. கொலையாளிகளை பிடிக்க நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர். அந்த பகுதியிலுள்ள 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக, ராம்நகர் பகுதியை சேர்ந்த ராஜா, கார்த்திக், அருண், அரவிந்த், பிரபு, பிரவீன் ஆகிய ஆறு பேர் இன்று மாலை கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடந்து விசாரிக்கின்றனர். கொலையான பிஜூவின் உடல், பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கட்டடம் முன், உறவினர்கள், இந்து அமைப்பினர் கூடியதால், 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X