கோஷ்டி மோதல் மூன்று பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோஷ்டி மோதல் மூன்று பேர் கைது

Added : செப் 14, 2020
Share

புதுவண்ணாரப் பேட்டை:புதுவண்ணாரப்பேட்டையில் நடந்த கோஷ்டி மோதலில், வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, சுனாமி குடியிருப்பு பகுதியில், நேற்று, பார்த்திபன் என்பவர், தன் நண்பர்களுடன் சென்று, பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி, ரகளையில் ஈடுபட்டு உள்ளார்.இதையறிந்த, சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த விக்னேஷ், அவரது நண்பர்கள் இருவருடன் சென்று, பார்த்திபன் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் தகராறில் ஈடுபட்டார்.

இதனால், இரு தரப்பினருக்கும் இடையே, கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பார்த்திபன், விக்னேஷை கத்தியால் குத்தினார். மேலும் சிவச்சந்திரன் என்பவரது பைக்கை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர். இது குறித்து, புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, பார்த்திபன், 24, சிவச்சந்திரன், 22, சுரேந்தர், 19, ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான, சதீஷ், 21, என்பவரை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X