பொது செய்தி

தமிழ்நாடு

நண்பர்கள் ஏமாற வேண்டாம் போலீஸ் அதிகாரிகள் வேண்டுகோள்

Added : செப் 14, 2020
Share
Advertisement

சென்னை:'போலீஸ் அதிகாரிகளின் பெயர்களில், 'பேஸ்புக்' பக்கத்தில், போலி கணக்கு துவங்கி, மர்ம நபர்கள் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுவதால், அவர்களிடம், நண்பர்கள் ஏமாற வேண்டாம்' என, போலீசார் கேட்டுக்கொண்டனர்.

தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மற்றும் போலீசாரின் பெயர்களில், மர்ம நபர்கள், சமூக வலைதளமான, பேஸ்புக் பக்கத்தில், போலி கணக்கு துவங்கி, அவர்களது நண்பர்களிடம் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை, போலீஸ் கமிஷனர், மகேஷ்குமார் அகர்வால், உதவி கமிஷனர், ஜூலியஸ் சீசர், ஓய்வு பெற்ற உதவி கமிஷனர், ராஜேந்திர குமார், போலீஸ்காரர் டில்லி ராஜா உள்ளிட்டோரின் பெயரில், பணம் பறிக்க முயற்சி நடந்துள்ளது.இது குறித்து, சென்னை, மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர். மர்ம நபர்கள், பணம் பறிக்க பயன்படுத்திய வங்கி கணக்குகள் மற்றும் மொபைல் போன் உள்ளிட்ட விபரங்களை, சைபர் கிரைம் போலீசார் சேகரித்து உள்ளனர்.

இதன் வாயிலாக, மர்ம நபர்கள், வட மாநிலத்தில் இருந்து செயல்படுவது தெரிய வந்துள்ளது. இவர்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் பெயர்களை மட்டுமே பயன்படுத்தி, பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுவதன் பின்னணி குறித்தும் விசாரிக்கின்றனர். இவர்களிடம், நண்பர்கள் மற்றும் தங்களுக்கு தெரிந்த நபர்கள் ஏமாற வேண்டாம் என, போலீஸ் உயர் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

இது குறித்து, கமிஷனர், மகேஷ்குமார் அகர்வால் கூறியதாவது:சென்னை போலீசில், இணைய தளம் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக நடக்கும் மோசடிகள் குறித்து விசாரிக்க, மிகவும் திறமை வாய்ந்த போலீஸ் அதிகாரிகள் உள்ளனர். இவர்களின் உதவியுடன், மத்திய குற்றப்பிரிவு போலீசார், மர்ம நபர்கள் குறித்து துப்பு துலக்கி வருகின்றனர். அவர்கள், விரைவில் கைது செய்யப்படுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X