பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரி மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க அழைப்பு

Added : செப் 14, 2020
Share
Advertisement

ஆர்.கே.நகர்:ஆர்.கே.நகர் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு, நேரடியாக விண்ணப்பிக்கலாம் என, அக்கல்லுாரி முதல்வர் சுடர்கொடி கூறினார்.

மாணவர் சேர்க்கை குறித்து, ஆர்.கே.நகர் அரசு கலை கல்லுாரி முதல்வர் சுடர்கொடி கூறியதாவது:ஆர்.கே.நகர் அரசு கலை கல்லுாரியில், தமிழக அரசின் விதிப்படி, இந்தாண்டு இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, ஆன்லைனில் நடைபெற்றது.

தற்போது, பி.ஏ., பிரிவில், தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம் மற்றும் பி.எஸ்சி., பிரிவில் கணிதம் பிரிவுக்கு ஏற்கனவே விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு, கல்லுாரியில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.மாணவர்கள், நேரடியாக கல்லுாரிக்கு சென்று, இப்பாடப் பிரிவுகளுக்கு புதிதாக விண்ணப்பிக்கலாம்.தமிழக அரசின் விதிகளை பின்பற்றி, மாணவர் சேர்க்கை பணி விரைவாக முடிக்கப்பட உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X