சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காவலர் குடியிருப்பில் போலீசார் சோதனை

Added : செப் 14, 2020
Share
Advertisement

மேலக்கோட்டையூர், ஒருங்கிணைந்த காவலர் குடியிருப்பில், வெளியாட்கள், வாடகைக்கு வசிப்பதாக எழுந்த புகாரை அடுத்து, போலீசார் அதிரடி ஆய்வு நடத்தினர்.

சென்னை, வண்டலுார் அடுத்த, மேலக்கோட்டையூர் பகுதியில், கடந்த, 2016ல், ஒருங்கிணைந்த, காவலர் குடியிருப்பு வளாகம் அமைக்கப்பட்டது. தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக் கழகம், 460 கோடி ரூபாயில், 2,673 அடுக்குமாடி வீடுகளுடன், இதை அமைத்தது.சென்னை, சுற்றுப்புற பகுதிகளில் வசித்த, காவல், சிறை, தீயணைப்பு துறையினர், இந்த வீடுகளில் வசிக்கின்றனர்.

பெரும்பாலானோர், வீடு ஒதுக்கீடு கருதி, துவக்கத்தில் வசித்து, தற்போது, பிற இடங்களில் வசிப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு வெளியில் வசிப்போர், காவலருக்கான வீடுகளை, வெளியாட்களுக்கு வாடகை விடுவதாக புகார் எழுந்துள்ளது.

இதையறிந்த உயரதிகாரிகள் உத்தரவின்படி, செங்கல்பட்டு மாவட்ட தனிப் பிரிவு போலீசார், காவலர் குடியிருப்பில், காவலர் வசிக்கின்றனரா என, ஆய்வு செய்தனர்.இதில், தனியார் நிறுவன ஊழியர்கள், வாடகை கார், ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளிட்டோர், 3,000 - 5,000 ரூபாய் மாத வாடகைக்கு குடியிருப்பதை அறிந்தனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X