பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...காஞ்சிபுரம்

Added : செப் 14, 2020
Share
Advertisement
 செய்தி சில வரிகளில்...காஞ்சிபுரம்

56 இருளர்களுக்கு உதவி

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம், காயார், கோவளம் கிராமங்களில் இருளர் மக்கள் வசிக்கின்றனர். கொரோனா ஊரடங்கால், தொழிலின்றி, இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.இதை அறிந்த சென்னை தன்னார்வ குழுவினர், மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும், 56 இருளர் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை வழங்கினர்.

கறவை மாடு பலி

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த, கருமாரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி அற்புதம், 50. இவருக்கு சொந்தமான மாடுகள், நேற்று முன்தினம் மேய்ச்சலில் இருந்தன.அப்போது, விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பத்தின் மின் கம்பிகள், திடீரென அறுந்து, மாட்டின் மீது விழுந்தது. இதில், மின்சாரம் பாய்ந்து, கறவை மாடு இறந்தது.

பனை விதைத்து விழிப்புணர்வு

மாமல்லபுரம்: கல்பாக்கம் அடுத்த, சதுரங்கப்பட்டினத்தில் வசிக்கும் நாகூரான் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், சிறுவர் - சிறுமியரிடம், பனை பயன்கள் விளக்கி, வளர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தி, பனை விதைக்கின்றனர். இரு ஆண்டுகளாக, சதுரங்கப்பட்டினம், சுற்றுப்புற பகுதிகளில், பனை விதைத்தனர். தற்போது, பனை சேகரித்து, 4,000 விதைகளை இப்பகுதிகளில் விதைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X