பொது செய்தி

தமிழ்நாடு

மழை முன்னெச்சரிக்கை துார்வாரும் பணி துவக்கம்

Added : செப் 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீர்வழித்தடங்களில் துார்வாரும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்கள், அதிக சேதத்தை சந்திக்கின்றன. எனவே, பருவமழைக்கு முன், இந்த மாவட்டங்களில் உள்ள அடையாறு, கூவம், ஆரணியாறு, கொசஸ்தலையாறு, வெள்ளாறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் பிரதான கால்வாய்களில், துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக, நடப்பாண்டில், 9.90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்வதில், பெரும் இழுபறி நீடித்தது.

தற்போது, ஒப்பந்ததாரர் தேர்வு முடிந்து, துார்வாரும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை டிசம்பரில் முடியும் வரை, தொடர்ச்சியாக நீர்வழித்தடங்களில் துார்வாரி, அடைப்புகளை நீக்க வேண்டும் என, ஒப்பந்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
15-செப்-202009:28:33 IST Report Abuse
Ramachandran Rajagopal வறட்சி காலங்களில் தூர் வாரும் பணியை மேற்கொள்ளாமல் மழை காலங்களில் தூர்வாரியதாக பொய் கணக்கு காட்டி அரசு பணத்தை சூறையாடுகின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X