பொது செய்தி

தமிழ்நாடு

'ஸ்மார்ட் போன்' பயன்பாடு போலீஸ் வேண்டுகோள்

Added : செப் 14, 2020
Share
Advertisement

சென்னை : 'பள்ளி மாணவர்களிடம், அவசியம் இல்லாமல், ஸ்மார்ட் போன்களை தரக்கூடாது; அவற்றை பயன்படுத்தும் மாணவர்களையும், பெற்றோர் கண்காணிக்க வேண்டும்' என, போலீசார் வலியுறுத்தி வருகின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால், வீடுகளிலேயே இருக்கும் மாணவர்கள், 'டிவி' பார்ப்பது மட்டுமின்றி, பெற்றோரின், இணைய வசதியுள்ள, ஸ்மார்ட் போன்களில், பல மணி நேரம், 'வீடியோ கேம்' விளையாடுகின்றனர். 'பேஸ்புக்; யு டியூப்' போன்ற சமூக வலைதளங்களையும் பார்க்கின்றனர்.அத்துடன், 'ஆன்லைன்' வகுப்பு காரணமாக, மாணவர்களிடம், ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

இதனால், மாணவர்களின் பார்வையில், தேவையற்ற படங்கள் மற்றும் வீடியோக்கள் இடம் பெறலாம். அவர்களுக்கு கவனச்சிதறல் மற்றும் ஒழுக்க சீர்கேடு ஏற்பட வாய்ப்பு அதிகம். மாணவர்களாகிய தங்கள் குழந்தைகளிடம் ஸ்மார்ட் போனை தருவதற்கு முன், பெற்றோரின், போனில், 'சைல்டு லாக்' செய்ய வேண்டும். ஸ்மார்ட் போனை பயன்படுத்தும் மாணவர்களை, பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.அவர்கள் அடிக்கடி பார்க்கும் வீடியோக்கள்; படங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என, போலீசார் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, துணை கமிஷனர் ஜெயலட்சுமி கூறியதாவது:சென்னையில், ஆவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், குழந்தைகளுக்கு எதிரான சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து, பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம்.அவசியம் இல்லாமல், 18 வயதிற்கு உட்பட்ட, மாணவர்கள் மற்றும் குழந்தைகளிடம், இணைய வசதியுள்ள, ஸ்மார்ட் போன்களை தரக்கூடாது. இணையதளத்தில் தேவையற்ற தேடல்கள் கூடாது என்பது குறித்து, மாணவர்களிடம் அன்பாக தெரிவிக்க வேண்டும். அவர்களை எவ்வித குற்ற உணர்வுக்கும் ஆளாக்கி விடக்கூடாது என, பெற்றோருக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X