அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நீட்'டுக்கு எதிரான முக கவசத்துடன் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வருகை

Added : செப் 14, 2020
Share
Advertisement

சென்னை : தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்கள், 'நீட்' தேர்வுக்கு எதிரான வாசகங்கள் அச்சிடப்பட்ட, முகக்கவசங்கள் அணிந்து, நேற்று சட்டசபைக்கு வந்தனர்.

சட்டசபை கூட்டத்திற்கு வந்த, எம்.எல்.ஏ.,க்கள, அமைச்சர்கள், முதல்வர், துணை முதல்வர், அதிகாரிகள், சட்டசபை பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் என, அனைவரும் முகக் கவசம் அணிந்து வந்திருந்தனர். பலர், 'என் - 95' முகக்கவசம் அணிந்திருந்தனர். பல்வேறு வண்ண முகக்கவசங்களையும் அணிந்து வந்திருந்தனர்.எதிர்கட்சி தலைவர்ஸ்டாலின் மற்றும் தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும்,''நீட் தேர்வை ரத்து செய்' என, தமிழிலும், 'பர்ன் நீட்; சேவ் தமிழ்நாடு ஸ்டூடன்ட்ஸ்' என, ஆங்கிலத்திலும் வாசகங்கள் அச்சிட்ட, வெள்ளை நிற முகக் கவசங்களை அணிந்து வந்திருந்தனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ., முகமது அபுபக்கரும், அந்த முகக்கவசத்தை அணிந்து வந்திருந்தார். ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சாதாரண முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர். 'நீட்' தேர்வை ரத்து செய்யக் கோரும், முகக் கவசம் அணிந்து வருவது குறித்து, தி.மு.க., சார்பில், எங்களுக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூறினர். கறுப்புக்கு தடைசட்டசபை கூட்ட அரங்கில், பணியில் ஈடுபடும் ஊழியர்கள், பாதுகாவலர்கள், வெள்ளை மற்றும் வண்ண முகக்கவசங்களை அணிந்து வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கறுப்பு நிற முகக்கவசம் அணிந்து வர, தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று சட்டசபை செயலக ஊழியர் ஒருவர், கறுப்பு நிற முகக்கவசம் அணிந்து வந்திருந்தார். அதற்கு பதிலாக, வேறு முகக்கவசம் அணிந்து வரும்படி, அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X