உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 1306.87 லட்சம் சிலிண்டர்கள் விநியோகம்

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement

புதுடில்லி : உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் 1306.87 லட்சம் சிலிண்டர்கள் வழங்கபட்டதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.



latest tamil news



மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் மூலமாக இன்று வரை கோடிக்கணக்கானவர்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்பவர்களுக்கு இலவச சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. நாட்டில் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இருக்கும் ஏழை மக்கள், இந்த திட்டம் மூலம் பயனடைந்து வருகிறார்கள்.
இது தவிர, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு எரிவாயு சிலிண்டர்களின் நன்மையும் கிடைக்கிறது. கொரோனா நெருக்கடி காரணமாக, ஏப்ரல் மாதத்துடன் முடிவடை இருந்த இலவச சிலிண்டர்கள் வழங்குவதற்கான காலக்கெடுவை மத்திய அரசாங்கம் செப்டம்பர் மாதம் வரை நீட்டித்தது. எனவே இப்போது இந்தத் திட்டத்தைப் பயன்படுத்த மக்களுக்கு இந்த மாதமும் உள்ளது.

இந்த திட்டத்தின் உண்மையான நோக்கம் அனைத்து தரப்பு குடும்பங்களையும் எல்பிஜி (Liquefied Petroleum Gas) சிலிண்டர் பயன்பாட்டுக்கு மாற்றுவதாகும். இது விறகு அடுப்பை விட மிகக் குறைந்த மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு 1306.87 லட்சம் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுதுறை அமைச்சர்தர்மேந்திர பிரதான் மக்களவையில் இது தொடர்பான அறிக்கையை கூறினார்.
பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 8 கோடி சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்குவதற்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அது செப்.,2019 ஆண்டு எட்டப்பட்டது. பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ஆக., 2020 வரை 1306.87 லட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வழங்கியுள்ளன.


latest tamil news



எரிவாயு சிலிண்டர்களை வாங்குவதற்காக ரூ 9670.41 கோடியை பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வழங்கியுள்ளன. மேலும் 2019-2020 ஆண்டின் உஜ்வாலா திட்ட பயனாளிகளின் ஒரு வருடத்துக்கான 14.2 கிலோ எரிவாயு சிலிண்டர்களின் பயன்பாடு 3.01 ஆக உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
15-செப்-202013:08:21 IST Report Abuse
 Muruga Vel ரெண்டு KG அஞ்சு KG சிலிண்டர் ஏழைகள் மத்தியில் வரவேற்பை பெரும் ..பீகாரில் சினின்படரிலிருந்து ஒரு கிலோ ரெண்டு கிலோ என்று சில்லறை விற்பனை பிரபலம் ..ஆனா காசு ஜாஸ்தி ..அரசாங்கமே குறைந்த எடை சிலிண்டர் விற்கலாம் ..
Rate this:
Cancel
15-செப்-202009:59:53 IST Report Abuse
ஆப்பு மத்திய அரசு குடுக்கும் இலவசம். மாநிலங்கள் குடுத்தா பிச்சை
Rate this:
Cancel
15-செப்-202009:59:43 IST Report Abuse
ஆப்பு மத்திய அரசு குடுக்கும் இலவசம். மாநிலங்கள் குடுத்தா பிச்சைன்னு சங்கிகள் பொங்கி வருவாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X