அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வின் 'நீட் எதிர்ப்பு' வெறும் நாடகம்: ஸ்டாலின்

Added : செப் 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 அ.தி.மு.க.,வின் 'நீட் எதிர்ப்பு'  வெறும் நாடகம்: ஸ்டாலின்

சென்னை : ''அ.தி.மு.க., அரசின், 'நீட்' எதிர்ப்பு, வெறும் நாடகம்,'' என, எதிர்கட்சி தலைவர், ஸ்டாலின் கூறினார்.

அவர் அளித்த பேட்டி:சட்டசபையில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி, எம்.எல்.ஏ.,க்கள் போன்றோருக்கு இரங்கல் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.'நீட்' தேர்வால் இறந்த, மாணவ - மாணவியர் பெயர்களையும் சேர்த்து தீர்மானம் நிறைவேற்றும்படி கோரினேன். அது, ஏற்கப்படாதது கண்டனத்திற்குரியது.இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் தான், சட்டசபை நடைபெற உள்ளது; அது, போதாது. நாட்டில் பல்வேறு பிரச்னைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், அவர்கள் ஏற்கவில்லை.

ஏற்கனவே, 20 கவன ஈர்ப்பு தீர்மானங்ளையும், தனித் தீர்மானங்களையும், விவாதத்திற்கு எடுத்து கொள்ள வேண்டும் என, 'நோட்டீஸ்' அளித்து உள்ளோம். இரண்டு நாட்களில், அவற்றை எல்லாம் எப்படி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் போகின்றனர் என்பது கேள்விக்குறியாக உள்ளது.முக்கியமானது, 'நீட்' பிரச்னை. இதனால், மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை குறித்து பேச வேண்டும். புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை போன்றவை குறித்தும் பேசி, விளக்கம் பெற வேண்டும்.

இது தவிர்த்து, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும், அவரவர் தொகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து, விவாதிக்க வேண்டும் என, நோட்டீசில் தெரிவித்துள்ளோம்.அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையிலும், கட்சி பொதுக்குழு கூட்டத்திலும், 'நீட்' தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதிலும் ஒப்புதல் தந்துள்ளனர். இதெல்லாம் ஒரு நாடகம்; மக்களை ஏமாற்றுவதற்கான நாடகம். இதுவரை ஒரு முறை கூட, முதல்வரோ, சம்பந்தப்பட்ட அமைச்சர்களோ, டில்லி சென்று பிரதமரையோ, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களையோ சந்தித்து வலியுறுத்தவில்லை. போதிய அழுத்தம் தரவில்லை என்பது தான் என் குற்றச்சாட்டு.இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
15-செப்-202002:34:38 IST Report Abuse
Baskar உனக்கு துணிந்து எதுவும் செய்ய தயிரியமும் கிடையாது. வாய் சவடால் அதிகம். உன் பள்ளிக்கூடங்களை முடி விட்டு அப்புறம் அரசு மேல் குற்றத்தை சுமத்து. நீட் என்ற அரக்கனை மாணவர்கள் மீது சுமத்தியது நீங்களும் காங்கிரசும் தான் என்று உலகத்துக்கே தெரியும். இப்படி இருந்தும் மேக்கப் இல்லாமலே இப்படி நடிக்கிறீர்கள் வெட்கம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X