பொது செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி தேர்வு நடத்த தடை:அரசு பல்கலைகளுக்கு உத்தரவு

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
அனுமதியின்றி தேர்வு நடத்த தடை:அரசு பல்கலை.களுக்கு உத்தரவு

சென்னை :கல்லுாரித் தேர்வுகளில், 'அரியர்' வைத்திருந்த மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல், 'ஆல் பாஸ்' வழங்கிய நிலையில், அரசு அனுமதி இல்லாமல் தேர்வு நடத்தக் கூடாது என, பல்கலைகளுக்கு உயர் கல்வித் துறை தடை விதித்துள்ளது.

அதேநேரம், கல்லுாரி இறுதியாண்டு மாணவர்களுக்கு, கடைசி செமஸ்டர் தேர்வுகளை மட்டும் நடத்த, அனுமதி அளித்துள்ளது. இன்ஜினியரிங் கடைசி செமஸ்டர் தேர்வுக்கான நேரம் உள்ளிட்ட விபரங்களை, அண்ணா பல்கலையும் அறிவித்துள்ளது



கொரோனா ஊரடங்கால், பல்கலை, கல்லுாரிகளின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கப்பட்டது. அதே நேரத்தில், 2019 - 20ம் கல்வியாண்டில், இறுதியாண்டு படித்த மாணவர்களுக்கு, கடைசி செமஸ்டர் தேர்வை மட்டும் நடத்தலாம் என, உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.முந்தைய ஆண்டுகளின் தேர்வுகளில், 'பெயில்' ஆகி, ஏப்ரல், மே தேர்வில் அரியர் தேர்வு எழுத விண்ணப்பித்தாலும், அவர்களுக்கும் ஆல் பாஸ் வழங்கப்பட்டது.இந்த அறிவிப்பால், பல ஆண்டுகளாக, 20 அரியர்கள் வரை உள்ளவர்கள், தேர்வே இல்லாமல் தேர்ச்சியாகினர். அவர்களில் பலர் பேனர் வைத்தும், 'பேஸ்புக்'கிலும், முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு பாராட்டு தெரிவித்தனர்.


கல்வியாளர்கள் எதிர்ப்பு



ஆனால், கல்வியாளர்கள் தரப்பில் அரியர், ஆல் பாஸ் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் அனில் சகஸ்ரபுதே, அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பாவுக்கு, 'இ - மெயில்' அனுப்பி, தமிழக அரசின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்தார்.


பல்கலைக்கு தடை

இந்த விவகாரத்தால், உயர் கல்வி அமைச்சர் அன்பழகனும், உயர் கல்வி முதன்மை செயலர் அபூர்வாவும், பல கட்ட ஆலோசனை நடத்தினர். முதல்வர் இ.பி.எஸ்.,சின், ஆல் பாஸ் உத்தரவுக்கு, அரசாணை பிறப்பிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர்

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள எந்த பல்கலையும், அரசின் அனுமதியின்றி தேர்வு நடத்தக் கூடாது என, தடை விதித்து உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு, கடைசி செமஸ்டர் தேர்வை மட்டும் நடத்தலாம் என, ஒப்புதல் அளித்துள்ளது. வரும், 24ம் தேதி முதல், 'ஆன்லைன்' வாயிலாக, இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், 2012ம் ஆண்டு முதல் இன்ஜினியரிங்கில் சேர்ந்து, இறுதியாண்டு கடைசி செமஸ்டரில், பல பாடங்களில் அரியர் வைத்துள்ளவர்களும், வரும் 24ம் தேதி முதல் நடக்கும் ஆன்லைன் தேர்வில் பங்கேற்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பப் பதிவு



இந்த தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு, இன்று துவங்க உள்ளது. நாளை மறுதினத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.தேர்வு குறித்து, கல்லுாரிகளுக்கு பல்கலை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ஆன்லைன் தேர்வு ஒரு மணி நேரம் நடத்தப்படும். ஒவ்வொருவரும் வீட்டில் இருந்து, 'மொபைல் போன், லேப்டாப்' மற்றும் கணினி ஏதாவது ஒன்றை பயன்படுத்தி தேர்வு எழுதலாம்.காலை, 10:00 முதல், மாலை, 5:00 வரையில், நான்கு, 'ஷிப்டு'களாக, ஐந்து நாட்கள் தேர்வு நடக்கும்.

இந்த தேர்வுக்கு, வரும் 19 முதல், 21ம் தேதி வரை, கணினி வழி மாதிரி தேர்வும் நடத்தப்பட உள்ளது.ஆன்லைன் தேர்வில், மொத்தம் 40 கேள்விகள் இருக்கும். அதில், 30 கேள்விகளுக்கு சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும். மாணவர்களுக்கான பாடத் திட்டத்தில், ஏதாவது நான்கு அலகுகளை படித்துக் கொள்ள வேண்டும்.தேர்வின்போது, கணினி, மொபைல் போன் பழுது ஏற்பட்டால், உடனே துறைத் தலைவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தேர்வு முடியும் வரை, கேமராவை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-செப்-202019:22:33 IST Report Abuse
சுரேஷ் இது தமிழக அரசு உத்தரவுதான். மத்திய பல்கலைகளுக்கு அல்ல. மத்திய பல்கலைத் தேர்வுகள் இரண்டு நாட்களில் துவங்க உள்ளது.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
15-செப்-202017:03:21 IST Report Abuse
Lion Drsekar எல்லோருமே படிக்காமல் பாஸ் படிக்காமல் பாஸ் என்று கூறினால் அப்படி பாஸ் செய்தவர்களுக்கு வருத்தமாக இருக்கும், ஆகவே ஏதாவது எழுதினால் பாஸ் என்று எப்படி பள்ளிக்களில் பின்பற்றப்படுகிறதோ அதே போன்று அறிமுகப்படுத்தினாள் மட்டுமே கட்டிய கட்டிடங்களுக்கு வருமானம் கிடைக்கும், இல்லையென்றால் மீண்டும் கட்டிடங்களை இடித்து விவசாயம் செய்யவேண்டிய நிலை உருவாகும், வந்தே மாதரம்
Rate this:
Cancel
vasan - doha,கத்தார்
15-செப்-202014:37:08 IST Report Abuse
vasan ஏன் இதே அண்ணா பலகாலயில் தான் விடைத்தாள் திருத்தும் ஊழல் நடைபெற்றது அப்போது இருந்தவர் இதே குருசாமி தான் ஐ சி டி யம் இருந்தது அப்போது தரம் கெடவில்லையா....இப்போதும் பேப்பர் சாஸ் செய்து பாஸ் ஆகும் நபர்கள் இருக்க தான் செய்கிறார்கள் அப்போது உங்கள் தரம் எங்கே போனது..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X